உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: பீஹாரில் 20 பேர் பலி

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: பீஹாரில் 20 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: வட மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயில் தொடர்பான சம்பவங்களில் பீஹாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.பீஹாரில், அதிகபட்சமாக வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அவுரங்காபாத்தில் பதிவானது. இதனால், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலர் அவதியடைந்து வருகின்றனர். ஷேக்புரா பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனிடையே, மாநிலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் அவுரங்காபாத்தில் 13 பேரும், கைமூர் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vathsan
மே 31, 2024 14:19

இங்கே 2 டிகிரி கூடியதும் திமுக தான் என்று சொன்ன ஒரு அறிவாளி. பிஹாரில் யாரால் 20 பேர் பலி.


Indian
மே 31, 2024 12:58

நம் காற்று மண்டலத்தை நாசப்படுத்தியதால் வந்த விளைவு மரங்களை வெட்டியதால் வந்த விளைவு >>?


மேலும் செய்திகள்