உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொட்டுது கனமழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு

கொட்டுது கனமழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (ஜூலை 06) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை ஜூன் 28ம் தேதி துவங்கியது. யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. இதுவரை பனிலிங்கத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு முதல் பல்டால் மற்றும் பஹல்காம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜூலை 06) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு 4.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குகைக் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை