உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலை புரட்டியெடுக்கும் கனமழை; இதுவரை 257 பேர் பலி

ஹிமாச்சலை புரட்டியெடுக்கும் கனமழை; இதுவரை 257 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் அதனை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 374 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 524 டிரான்ஸ்பார்மர்களும், 145 தண்ணீர் விநியோக திட்டங்களும் முடங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k96fgi2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மண்டி, குலு மற்றும் கின்னார் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 20ம் தேதி பருவமழை தொடங்கியது முதற்கொண்டு கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட மழை சார்ந்த சம்பவங்களில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 124 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 257 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல லட்சம் மதிப்பில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.வரும் காலங்களில் சீரான இடைவெளியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலைப்பாதைகளில் பயணிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nisar ahmad
ஆக 17, 2025 08:33

ஹிமாச்சலில் தானே நடக்கட்டும் கடவுளௌ இருக்கான் குமாரு.


m.arunachalam
ஆக 16, 2025 20:59

நம் கட்டுப்பாட்டில் இல்லாத இயற்கையின் எச்சரிக்கையை உணர்ந்து துர்போதனைகளை பகுத்தறிந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் வாழ பழகுவோம்.


சாமானியன்
ஆக 16, 2025 20:29

நிலைமை சரியில்லை. சுற்றுலா போவதை அடுத்த ஆண்டு தள்ளிப் போடனும்.


Amar Akbar Antony
ஆக 16, 2025 20:05

தமிழகத்தில் இருக்கும் மலை பிரதேசங்களை கை எண்ணிக்கையில் அடக்கலாம். கேரளாவும் கிட்டத்தட்ட அதே போல்தான். ஆனால் கேரளா அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. இப்படியிருக்க மலையும் பள்ளத்தாக்குகளும் ஒரு மாநிலமானால் அதிலும் சுற்றுலாத்துறைக்கான சகலவித இயற்கை மீறி கட்டடங்கள் கட்டினால் விதியை வெல்லக்கடினம். இறைவனன்றி வேறொருவனும் காப்பாற்றமுடியாது. நமசிவாயை வாழ்க


SANKAR
ஆக 16, 2025 19:53

pinaraayee vijayan responsible for this.he must resign


Ramesh Sargam
ஆக 16, 2025 19:50

அந்த மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் குடியிருப்புக்களை பாதுகாப்பு கருதி முற்றிலும் அகற்றிவிட்டு, இந்த பிரச்சினைகள் இல்லாத வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் அரசாங்கம் வீடுகள் கட்டித்தரவேண்டும். இந்த பிரச்சினை ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்சினை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 16, 2025 19:37

ஹிமாசல பிரதேஷ் மாநிலம் முழுவதுமே மலைகள்தான். அதுவும் இமயமலையின் துவக்கப்பகுதி. ஆறுகள், நீரோடைகள், காடுகள், ஏற்ற இறக்கங்கள் என நிலப்பகுதி முழுவதும் மிகக்கடுமையாக இருக்கும். நினைத்த இடத்தில் சாலைகள் அமைக்க முடியாது. இருக்கும் சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் துண்டிக்க வாய்ப்பு. எங்கு எப்போது மண் சரிவு ஏற்படும், எங்கு எப்போது காட்டாற்று வெள்ளம், திடீர் நீர்வீழ்ச்சி ஏற்படும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். அம்மாநில மக்களின் அன்றாட பிரச்சனைகளை பெரும்பாலான நம் தமிழக மக்களால் புரிந்துகொள்ளக்கூட முடியாது. நமது தமிழக சமதள நிலப்பரப்பு நமக்கு மிகவும் சாதகமான விஷயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை