உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை துவங்கியதில் இருந்து 440 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி உள்ளதுதென் மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூ் 1 ல் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக மே 24 ம் தேதியே துவங்கியது. இதற்கு முன்னர் கடந்த 2009 ம் ஆண்டு மே 23 ல் தென் மேற்கு பருவமழை துவங்கியது.இந்தாண்டு பருவமழை துவங்கியது முதல், அம்மாநிலத்தில் மழை கொட்டி த் தீர்த்து வருகிறது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், கேரளாவில் தென் மேற்குப ருவமழை துவங்கிய மே 23 முதல் இன்று( மே31) வரையிலான காலத்தில் 440.1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.இந்த காலத்தில் பதிவாக வேண்டிய மழை அளவு 81.5 மி.மீ., மாவட்டங்களை பொறுத்தவரை பாலக்காட்டில் வழக்கமாக 44 மி.மீ., மழை பதிவாக வேண்டிய நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் அங்கு 434.9 மி.மீ., மழை பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.வானிலை மையம் எச்சரிக்கைஇதனிடையே, கேரளாவில் அடுத்த 4 -5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

திமுக
மே 31, 2025 20:19

மரம் வளருங்கள் என்று சொன்னால் யாரும் கேட்பதில்லை


Ramesh Sargam
மே 31, 2025 19:38

பெய்யற மழையின் தீவிரத்தை பார்த்தால் கேரளா மாநிலமே மண்ணுக்குள் உள்வாங்கிவிடும் போல தெரியுது. அப்பா, ஆண்டவா, அப்படி எதுவும் விபரீதம் ஏற்படாம மக்களை காப்பாற்றப்பா?


மீனவ நண்பன்
மே 31, 2025 20:16

எல்லா சமய கடவுள்களும் மனசு வைக்கணும் ..வித்தியாசமான தேசம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை