உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்: தினமும் நொந்து நூலாகும் மக்கள்!

பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்: தினமும் நொந்து நூலாகும் மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கனமழை காரணமாக பெங்களூருவில் சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகராக கர்நாடக தலைநகர் பெங்களூரு உருவெடுத்து உள்ளது. நகரில் தினமும் 80 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இதனால்,எந்த சாலையைப் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள், மாலையில் வீடு திரும்புபவர்கள் நெரிசலில் சிக்கி நொந்து நூலாகின்றனர். சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பெங்களூருவில், மழைக்காலத்தில் சொல்ல வேண்டியதில்லை.கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நகரில் உள்ள சாலைகளில் பெரும் பள்ளங்கள் விழுந்துள்ளன. பள்ளங்களில் வாகனங்களை இறக்கினால் பழுதடைந்து விடும் என்று கருதி வாகன ஓட்டிகள் அதனை தவிர்த்து செல்ல முயல்கின்றனர். இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை காரணமாக சாலைகளும் குளங்கள் போல மாறி உள்ளதால், வாகனங்கள் தத்தளித்தபடி செல்கின்றன. ஆட்டோ, கார், பைக் சைலன்சர்களில் வெள்ள நீர் புகுவதால் சாலையின் நடுவே நின்றுவிடுகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோதாது என்ற போக்குவரத்து சிக்னல்களில் நெரிசல் ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசம். சிக்னல்களில் சிவப்புவிளக்கு மாறி, பச்சைவிளக்கு எரிந்தாலும், சிக்னல் கோடு முன் நிற்கும் வாகன ஓட்டிகள், வாகனங்களை வேகமாக எடுப்பது இல்லை.சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால், ஐந்து நிமிடங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல, அரைமணி நேரம் ஆகும். இப்போது மணிக்கணக்கில் ஆகிறது.நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது.நெரிசலில் காத்திருந்த வாகன ஓட்டிகள் ஒரு கட்டத்தில் வெறுப்பு அடைந்தனர். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சிக்கே சென்ற பலர், தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, வீடு மற்றும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே சென்றனர்.போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் வெளியிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Raj S
அக் 25, 2024 01:51

சரி தான்... நம்பிக்கை துரோகிகளை என்றும் மறக்க கூடாது... அவர்களை நினைக்கும் போது அதிரலை, நெஞ்சம் கொதிக்குது


chennai sivakumar
அக் 24, 2024 22:12

Bangalore is flooded with population, vehicles அண்ட் ஓர்கனைசேஷன்ஸ்.தலைநகராக இருந்த மைசூரை பெங்களூருக்கு மாற்றியதில் இருந்து பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டது. இனிமேல் டூ லேட். ஒண்ணும் வழி இல்லை. கஷ்டமோ நஷ்டமோ ஓட்ட வேண்டியதுதான்.


KRISHNAN R
அக் 24, 2024 19:58

எல்லா இடமும் இனி இப்படி தான். பிளாஸ்டிக், ஓவர் பில்டிங்...இயற்கை.. காலி......மக்கள் தொகை அடர்த்தி பிழைப்புக்காக.... கட்சிகள்... வேறு ஒரு வேலையில் பிஸியா இருப்பாங்க..என்ன செய்வது


Ramesh Sargam
அக் 24, 2024 19:46

நொந்து நூடுல்ஸ் ஆகும் பெங்களூரு மக்கள்.


Sivagiri
அக் 24, 2024 19:37

நாற்பது வருஷத்துக்கு முன்னாடி , அடேங்கப்பா பெங்களூரா , சூப்பர் ஊரு , கார்டன் சிட்டி , கிளைமேட் சூப்பர் , கிளீன் சிட்டி , அப்டி இப்டி-ன்னு சொல்லி எல்லா ஜனங்களும் படை எடுத்து வந்து , இப்போ எல்லாம் நாசமா போச்சு . . . வெறும் தார் ரோடு, பொலுஷன் - தான் சிட்டின்னு ஆகிப்போச்சு , டில்லி , ஹைதராபாத் , பெங்களூர் , இனிமேல் மனிதர்கள் வாழ முடியாத இடங்கள் . எந்த உயிர்களும் வாழ முடியாது , , , சென்னை பம்பாய் , இதெல்லாம் , கடற்கரையில் இருக்கிறதால தப்பிச்சிருச்சு ,


நிக்கோல்தாம்சன்
அக் 24, 2024 18:47

என்ன அரசோ இது , ஒருபுறம் நீர் தேங்குகிறது என்றால் மற்றொரு புறம் bwssb வந்து சாலையை நோண்டுகின்றனர் , சாலைவிதிகளை மதிப்பதே இல்லை மக்கள்


GMM
அக் 24, 2024 18:11

பெங்களூர் உள் நடை பாதை இல்லை. ?நடைபாதை கடைகள் உண்டு. சைக்கிள் தடம் இல்லை. வடிகால் வாய்க்கால் அடைப்பு நிலை. ? இரு சக்கர தனி வழி இல்லை. குறுக்கு ஊருக்கு செல்ல மினி பஸ் இல்லை. மேம்பால ஆட்டோ கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் ? கட்டாது . நிறுவனம் அதிகம். வாகன உபயோகம் அதிகம். கூட்ட நேரத்தில் லாரி / டெம்போ போக்கு முக்கிய சாலையில் கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றி சாலையை அகல படுத்த முடியும். உள்ளூர் அரசியலில் முடிவு எடுப்பது கஷ்டம். பெரு நகர்கள் யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும். நீதிமன்றம், ஜெயில் , 24 மணி பணியில்லாத துறைகள் நகருக்கு வெளியில் மாற்ற வேண்டும். இன்னும் தண்ணீர் லாரி மூலம் வழங்க படுகிறது. சாலை முனையில் சேம்பேர் கட்டி, 2-3 கிலோ மீட்டர் குழாய் பதித்து லே அவுட் களுக்கு தண்ணீர் வழங்க முடியும். நெரிசல் குறையும். சற்று தூரத்தில் துணை சாலை அமைக்க வேண்டும்.


Easwar Kamal
அக் 24, 2024 17:34

பெங்களூரு அழகிய நகரமா இருந்தது. எப்போது மெட்ரோ ஆனதோ சென்னையோடு போட்டி போட்டு எல்லாவற்றயும் அங்கு கொண்டு போனார்கள். பேராசை பிடித்த கன்னடியர்கள் அருகில் உள்ள ஓசூர் வளர்ந்து விடக்கூடாது என்று அங்கு ஷீலா வேண்டிய பல தொழில் துறைகளை தடுத்து நிறுத்தனத்திற்கு இன்று அனுபவிக்கிறார்கள்.


sundar rao
அக் 25, 2024 10:03

Then why people from TASMAC NADU prefer to work in Bengaluru than when opportunities exist in other cities in India.


Duruvesan
அக் 24, 2024 17:32

மலர் இப்போதெல்லாம் புரளி நியூஸ், நான் 99பி ல நேத்திக்கு போனேன் , 30 நிமிடம் மஜெஸ்டிக் போய்ட்டேன். மெட்ரோ ல சாண்டல் சோப்பு ல இருந்து 15நிமிஷம் தான்.தெரிஞ்சா போடணும் இல்லைனா மூடிட்டு இருக்கணும்.


Palanisamy Sekar
அக் 24, 2024 17:00

பெங்களூருவில் மனுஷன் வாழ்வானா? அதெல்லாம் ஒரு ஊரா? சுற்றுசூழலில் டெல்லியை பின்னுக்கு தள்ளிவிடும். தண்ணீர் பற்ற்றாக்குறையை என்னென்பது. காங்கிரஸ்காரர்களுக்கு பதவி சுகம் மட்டுமே வேண்டும். நகரின் முன்னேற்றத்தையோ அல்லது போக்குவரத்து நெரிசலையோ தீர்க்க எந்த ஒரு திட்டமும் கிடையாது. வெப்பத்தின் அதிகம் அங்கே உணரலாம். ஒருகாலத்தில் பசுமை நகரமாக இருந்த பெங்களூரு இப்போ நரகமாக இருக்கிறது. வியாதிகளின் உற்பத்தி நரகம் பெங்களூரு. வாக்களித்த மக்களுக்கும் ஏதோ கோளாறு இருக்கின்றது உண்மைதான். காங்கிரஸ்காரன் எதையுமே செய்ய தெரியாது ஊழல் செய்ய மட்டுமே ஆட்சிக்கு வருவார்கள் என்பதை தெரிந்தும் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு மக்களை என்னென்பது. பெங்களூரு கர்நாடகாவின் சுமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை