உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனிதாபிமான அடிப்படையில் உதவி: அமித்ஷா விடம் நேரில் கோரிக்கை வைத்த பிரியங்கா

மனிதாபிமான அடிப்படையில் உதவி: அமித்ஷா விடம் நேரில் கோரிக்கை வைத்த பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, வயநாடு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்,'' என வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்தார்.கடந்த ஜூலை 30 ல் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 397 பேர் காயமடைந்தனர். இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இதனை மத்திய அரசு ஏற்கவில்லை.இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கேரள எம்.பி.,க்களுடன் சேர்ந்து வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா சந்தித்தார். இதன் பிறகு பிரியங்கா கூறியதாவது: பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் மனு அளித்துள்ளோம். வயநாடு பேரிடரில் மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். பலர் குடும்ப உறுப்பினர்களையும் இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தலையிடாவிட்டால், ஒட்டு மொத்த நாட்டிற்கும், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தவறான செய்தியை அனுப்பும். வயநாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தோம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது, அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். எந்த ஆதரவும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய அரசு செயல்படாவிட்டால், மக்கள் யாரை நம்புவார்கள். அரசியலை ஓரம் வைத்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களை நான் சந்தித்த போது, பிரதமர் எங்களுக்கு உதவுவார் என, என்னிடம் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்காதது துரதிர்ஷ்டம். இவ்வாறு பிரியங்கா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஆரூர் ரங்
டிச 05, 2024 11:45

சட்டவிரோத கட்டுமானங்களை அனுமதித்தது INDI கூட்டணியிலுள்ள காங்கிரசும் கம்யூனிஸ்டு அரசுகள். அதனால் பேரிடர் விபத்துக்கள் ஏற்பட்டால் நிவாரணம் அளிக்க வேண்டியது. மத்திய அரசா? பார்க்கப் போனால் இவர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்து அந்த நிதியில் மக்களுக்கு உதவலாம். அதைக் கூட கூட்டமாக எதிர்த்து வாக்களிக்கும் மூர்க்க ஆட்களுக்கு மறுத்துவிட வேண்டும்.


ராமகிருஷ்ணன்
டிச 05, 2024 06:19

மனிதாபிமானம் சிறிதும் இல்லாதவர்களுக்கு எதற்காக மனிதாபிமான உதவி. உன்னை MP யாக தேர்ந்தெடுத்த காரணத்திற்காக முஸ்லிம் தீவிரவாத காங்கிரஸ் தண்டிக்க பட வேண்டும்


Visu
டிச 04, 2024 23:33

உங்களிம் இல்லாத பணமா கொஞ்சம் செலவு பண்ணுங்க


AMLA ASOKAN
டிச 04, 2024 23:05

பிறப்பொக்கும் என்ற குறள் வரிகள் பொய்யானவை. இந்தியாவில் இயற்கை பேரிடரினால் மக்களுக்கு துயரம், துன்பம், அவலம் ஏற்பட்டால் அவர்கள் பிறக்கின்ற மாநிலத்தை பொறுத்துத் தான் அவர்களுக்கு மத்திய அரசின் நிவாரணம் கிடைக்கும். மனித நேயமே இல்லாத போது மனிதாபிமானம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியங்கா காந்தி சென்று உள்ளதால் நிவாரணத்திற்கும் வாய்ப்பே இல்லை. எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் இந்தியன் என்ற உறவே இல்லை .


Sivagiri
டிச 04, 2024 22:58

பினராயி-யை பார்க்கலாமே . . . அவருக்கெல்லாம் மனிதாபிமானம் இருக்காதோ .. ?


தாமரை மலர்கிறது
டிச 04, 2024 21:38

பத்து பைசா கிடையாது. வெள்ளம் வந்து ஒரு வருஷம் ஆகப்போவுது. வயநாடு தெளிந்துவிட்டது. இன்னமும் காசு கொடு காசு கொடுன்னு நச்சரிச்சுக்கிட்டு இருக்கிற. பேசாம ஓடி போயுடு.


Ganapathy
டிச 04, 2024 21:16

மொதல்ல அங்கு கட்டிடங்கள் கட்ட திட்டங்கள் அமைக்க தடையிருந்தும் யாரின் அனுமதியோடு இவை அமைக்கப்பட்டன? எந்த கட்சியின் ஆடசியாளன் இதற்கு பொறுப்பு? காங்கிரஸ் அல்லது கம்பிகள் இவர்கள்தானே காரணம். மக்களிடம் மாநில அரசு வாங்கும் வருவாய் மற்றும் ஜிஎஸ்டியில் பங்கு இவை எங்கே போயின? எதற்கு வரி வஸூலிக்கும் மாநில அரசுக்கு மத்தியரசின் பணத்தை கொடுத்தவேண்டும்?.


Ganapathy
டிச 04, 2024 20:58

கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி கேரள மக்கள் வரியை திருட இப்படிப்பட்ட "மனிதாபிமான" நாடகம். வெட்கக்கேடான பிழைப்பு


Varadarajan Nagarajan
டிச 04, 2024 20:11

நிவாரணம் என்றாலே மத்திய அரசுதான் கொடுக்கவேண்டும் என்பதுபோல ஒரு தவறான கருத்தை கட்டமைக்க முயலுகின்றன பல மாநிலங்கள் மற்றும் அரசியல் காட்சிகள். அப்படியென்றால் மக்களிடமிருந்து கிடைக்கும் வரிவருவாயில் பெரும்பங்கை பெரும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொறுப்பு மற்றும் கடமை என்ன? தங்கள் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிசெய்யும் மாநில முதல்வரிடம் ப்ரியங்கா வலியுறுத்தினாரா?


பல்லவி
டிச 04, 2024 19:56

கேட்டாலும் கேட்காவிட்டாலும் கிடைக்காது சும்மானாச்சும் கூடிய விரைவில் கிடைக்காது


புதிய வீடியோ