உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை பிடியில் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத்: இண்டியா கூட்டணியின் நீங்கா தலைவலி

அமலாக்கத்துறை பிடியில் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத்: இண்டியா கூட்டணியின் நீங்கா தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெவ்வேறு வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். இண்டியா கூட்டணி கட்சிகளின் பல தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை பிடியில் இருப்பது அக்கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கின. அப்போதிருந்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேற்குவங்கத்தில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என அம்மாநில முதல்வர் மம்தா கூறினார்; இதனைத்தொடர்ந்து பஞ்சாபிலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடுவதாக அங்கு ஆளும் ஆம்ஆத்மி கட்சி அறிவித்தது.இண்டியா கூட்டணியில் இடம்பெற்றாலும் அந்தந்த மாநிலங்களில் கட்சிகள், கூட்டணிக்கு இடம்கொடுக்காமல் போட்டியிட முடிவு செய்வதால் அனைத்து கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதற்கு அடுத்ததாக பீஹாரில் நிதீஷ்குமார், இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இது அம்மாநிலத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சி தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.

ஹேமந்த் சோரன்

இதில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பியும் அதனை புறக்கணித்தார். பின்னர் கடந்த ஜன.,20ல் ஆஜரான ஹேமந்த், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதற்காக நேற்று (ஜன.,28) டில்லி சென்றார் ஹேமந்த். அவரின் இல்லத்திற்கு இன்று சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத்

அதேபோல், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் லாலு உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அமலாக்கத்துறையின் பிடியில் உள்ளனர்.இது தொடர்பான வழக்கில் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் மிஸா உடன் ஆஜரானார். இது மட்டுமல்லாமல் டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார். இப்படி வரிசையாக இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளதால், இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
ஜன 30, 2024 00:25

உடல்நிலை சரி இல்லை என்று பிஹார் முதலமைச்சர் லாலு பிரசாத் சிறையிலிருந்து ஜாமினில் வெளியிலம் வந்து உலாவுகிறார். லாலு பிரசாத்: 'இண்டியா' கூட்டணியின் கூட்டங்களுக்கும் உச்சநீதி மன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் அங்கே சென்று அங்கம் வகித்தவுள்ளார் இதுதான் உச்சநீதி மன்றத்தின் உத்திரவை பின்பற்றி நடந்துகொள்ளும் விதமா உச்ச நீதி மன்றமும் சிறிதுகூட கண்டுகொள்ளாமல் இருக்கிறது வேடிக்கையான நீதிமன்றம் எப்படித்தான் இவரமீது உடனே சட்டம் பாயவில்லையோ சாதாரண மக்களிமீது உடனே பாயும்


Kasimani Baskaran
ஜன 29, 2024 22:40

நீதித்துறை சில சம்யம் நிதித்துறைக்கு கட்டுப்பட்டு வழக்குகளை பட்டியலிடுவது கிடையாது. ஏன் என்று கேட்டால் பழைய வழக்குகளுக்கு புதிய ஒராண்டு விதி பொருந்தாது என்று உருட்டி தப்பிவிடுவார்கள். வின்சி போன்றோர் ஹெரால்டு மோசடி போன்ற வழக்குகளில் எல்லையில்லாமல் காமடி செய்கிறார்கள். எப்படி கட்சியின் கடன் மூலம் கட்சியின் சொத்துக்களை கைப்பற்ற முடியும் என்றால் முளிக்கிறார்கள்.


Rajagopal
ஜன 29, 2024 21:53

இந்த மாதிரி ஊரை முழுதும் பகல் கொள்ளையடிக்கும் கூட்டணிக்கு வாக்கு அளிப்பவர்களும் இருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இவர்களிடம் மக்கள் எண்ணத்தை கண்டார்கள்? நாடு வளர வேண்டும், ஊழல் மறைய வேண்டும், தாங்கள் உருப்பட வேண்டும் என்கிற ஆசை இந்த மக்களிடம் இல்லையா?


sankar
ஜன 29, 2024 15:41

கூட்டணி முழுவதுமே நவ ரத்தினங்கள் - ராசா, கனிமொழி, லாலு, சோரன், வாலு, பானர்ஜி, அன்டோனியா மைனோ & கோ என்று எல்லாமே ஆட்டைய போட்டு அமர்ந்து இருக்கும் கனவான்கள் - சிறப்பான கூட்டணி


Jysenn
ஜன 29, 2024 14:32

Sherlock Holmes Solves "The Strange Case of Missing Chief Minister " - Conan Doyle.


sankar
ஜன 29, 2024 14:31

களவாணி பயக கூட்டணி


RAMAKRISHNAN NATESAN
ஜன 29, 2024 13:49

உப்பைத் தின்றால் ??


Sridhar
ஜன 29, 2024 12:23

திருட்டு கும்பல் மொத்தமும் ஒரே அணியில் திரண்டு நிற்பது யாருக்கும் வியப்பை அளிக்காது. இந்தி கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கூட யோக்கியமான கட்சி இல்லை. பெரும்பாலும் முன்பு ஆட்சியிலிருந்து மக்கள் பணத்தை சுரண்டி இப்போது ஆட்சியில்லாமல், மீண்டும் எப்போ வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் கட்சிகள் தாம் நம்மூரு திருட்டு கும்பல் அதே ரூட்டுல மக்களை ஏமாத்தி மீண்டும் ஆட்சியை பிடித்து 2G எல்லாம் ஒண்ணுமில்லங்கற அளவுக்கு மக்கள் செல்வங்களை சுரண்டோ சுரண்டுன்னு கொள்ளை அடிச்சிட்டு இருக்கானுங்க. ED CBI ஓட செயல்களும் ஒன்னும் சுறுசுறுப்பா இல்ல. இவுனுகள பிடிச்சு தண்டனை கொடுக்கலேன்னா, ஆண்டவனால் கூட நம் நாட்டை காப்பாத்த முடியாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை