உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காய்கறி வியாபாரியிடம் ஹெராயின் பறிமுதல்

காய்கறி வியாபாரியிடம் ஹெராயின் பறிமுதல்

புதுடில்லி:ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், 200 கிராம் போதைப்பொருளுடன் காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.ஆனந்த் விஹார் ரயில் நிலையம் அருகே, சவுத்ரி சரண் சிங் மார்க் சர்வீஸ் சாலையில், 17ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் நகரைச் சேர்ந்த ராகுல், என்ற காய்கறி வியாபாரியிடம், 213.5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.பரேலியில் ஹெராயின் வாங்கி டில்லியில் சப்ளை செய்வது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை