உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 லட்சம் லஞ்சம்: பஞ்சாபில் டிஐஜி கைது

ரூ.5 லட்சம் லஞ்சம்: பஞ்சாபில் டிஐஜி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் வழக்கு ஒன்றை தீர்த்து வைப்பதற்காக 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.2007 ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் புல்லார். இவர் ரோபர் சரக டிஐஜி ஆக கடந்த 2024ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் ஊழல் கண்காணிப்பு, மொகாலி, சங்குரு மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் பதேகார்க் நகரில் உள்ள பழைய பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் புகார் தொடர்பான வழக்கிற்காக ஹர்சரண் புல்லார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதனை கொடுக்க விரும்பாத அவர், சிபிஐயிடம் புகார் தெரிவித்தார்.இதனையடுத்து டிஐஜியை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இன்று அவர் குற்றம்சாட்டப்பட்டவரிடம் ரூ.5 லட்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

mdg mdg
அக் 17, 2025 10:38

இவர் ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக அந்த காலகட்டத்தில் ஊழல் எவ்வாறு இருந்திருக்கும் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.


visu
அக் 17, 2025 07:29

இப்படி ஏன் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளை ஊழல் செய்தால் கைதுசெய்ய முடிவதில்லை


அப்பாவி
அக் 17, 2025 06:59

இவுரு நேரு காலத்து பேட்ச்..


Sun
அக் 16, 2025 23:18

மான் ஆட்சியில் ஒரு பொய்மான்!


rama adhavan
அக் 16, 2025 22:24

பதவிக்கேற்ற லஞ்ச தொகை போல் உள்ளது. அங்கு என்ன மாடல் ஆட்சி?


A viswanathan
அக் 17, 2025 00:02

தாங்கள் பதவியை நினைத்தாவது லஞ்சம் வாங்காமல் இருந்திருக்கலாம் அல்லவா.


பிரேம்ஜி
அக் 17, 2025 07:09

பதவியில் இருப்பதால் தானே லஞ்சம் வாங்க முடிகிறது?


புதிய வீடியோ