வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிறகு ஏசி சட்டை - பாண்டு - புடவை - ரவிக்கை - பனியன் என்று மக்கள் அணியும் உடைமைகளுக்குக்கூட ஏசி வந்துவிட்டால் நல்லது நாம் வெளியே சுற்றலாம் சீக்கிரம் வீட்டிற்கே வரவேண்டாம்
பிலாஸ்பூர்: இமாச்சலப்பிரதேசம் பிலாஸ்பூரில் வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து போலீசார் தப்பிக்க ஏதுவாக ஏசி வசதியுடன் கூடிய ஹெல்மெட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. குஜராத், டில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கத்தின் போது போக்குவரத்து போலீசாருக்கு பிரத்யேகமாக ஏசி பொருத்தப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்படுகின்றன.இத்தகைய நடவடிக்கைகள் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதை முன் மாதிரியாக கொண்டு மற்ற மாநிலங்களும் இதே நடைமுறையை பின்பற்றி தொடங்கி உள்ளன. அதன் சமீபத்திய முன்னேற்றத்தின் ஒரு அம்சமாக இமாச்சலப்பிரதேசம் பிலாஸ்பூரில் ஏசி ஹெல்மெட் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் கூறி உள்ளனர்.இதுகுறித்து போலீஸ் எஸ்.பி., சந்தீப் தவால் கூறியதாவது; வெயிலில் நீண்ட நேரம் போக்குவரத்து போலீசார் நின்றபடி பணி செய்கின்றனர். அதனால் உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. பணித்திறனும் பாதிக்கப்படுகிறது.இதை தவிர்க்கும் பொருட்டு பணிநேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் வண்ணம் ஏசி ஹெல்மெட்டுகளை அளிக்கும் திட்டத்தை முன்னோட்டமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது பற்றி கூறப்படும் கருத்துகள், பின்னூட்டங்களை அடிப்படையாக கொண்டு விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு ஏசி சட்டை - பாண்டு - புடவை - ரவிக்கை - பனியன் என்று மக்கள் அணியும் உடைமைகளுக்குக்கூட ஏசி வந்துவிட்டால் நல்லது நாம் வெளியே சுற்றலாம் சீக்கிரம் வீட்டிற்கே வரவேண்டாம்