உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி

ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ நேற்றைய பேச்சின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ராகுல் அவமதித்து விட்டார். தலைமுறை தலைமுறையாக ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என பிரதமர் மோடி கூறினார்.

ஜாமினில்

லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: லோக்சபாவில் நேற்று ராகுல் குழந்தை தனமாக நடந்துகொண்டார்; குழந்தை போல அழுதார். சிறுபிள்ளைத் தனமான ராகுலின் செயல் பார்லியின் அனைத்து வரைமுறைகளையும் கடந்து விட்டது. குழந்தைத்தனமான புத்தி தான் லோக்சபாவில் ஒருவரை திடீரென கட்டிபிடிக்கும், கண்ணடிக்கும். மக்களிடம் அனுதாபத்தை பெற புதிய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றியுள்ளது. ராகுல் ஜாமினில் தான் வெளியில் உள்ளார் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் ராகுலை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தியது. ஓபிசி.,யினரை அவமதித்ததற்காக ராகுல் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் ராகுல். குழந்தை போல் நடந்து கொள்கிறார் என்பதற்காக ராகுலை மன்னித்துவிட முடியாது.

அனைத்திலும் பொய்

லோக்சபாவில் பொய்யான கருத்துகளை கூறி அவையை தவறாக வழிநடத்த முயன்றார். குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுப்பதில்லை, அக்னிபத், இட ஒதுக்கீடு, ரபேல் எல்ஐசி, அரசியல்சாசனம், மின்னணு ஓட்டு இயந்திரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பொய்யை மட்டுமே கூறி இருக்கிறது காங்கிரஸ்.

பொய் வாக்குறுதிகள்

அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல். நாட்டின் பெண்கள், சகோதரிகளுக்கு மாதம் ரூ.8500 வழங்குவதாக பொய் கூறியது. இந்த பொய் வாக்குறுதிகளை சில சகோதரிகள் நம்பினர். அக்கட்சி கொடுத்த பொய் வாக்குறுதிகளே காங்கிரசை வந்து கடிக்க போகிறது. சகோதரிகள் தாய்மார்களின் சாபம் காங்கிரசை தாக்கும்.நேற்று நடந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.ராகுலால்ஆட்சி அமைத்து விட முடியாது.

சர்வாதிகாரம்

காங்கிரசின் நோக்கங்கள் மிகவும் அபாயகரமானவை. சர்வாதிகாரத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக காங்கிரஸ் திணித்தது. கொடூரத்தின் அடையாளமாக காங்கிரஸ் விளங்கி வருகிறது. அதிகாரப்பசியினால் நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. ஊடகங்கள் முடக்கப்பட்டன. அரசியல்சாசனம் ஒடுக்கப்பட்டது.ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்கினர்.

அநீதி

அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையை முடக்க நேரு முழு முயற்சியையும் மேற்கொண்டார். தலித்களுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்ததால் தான் நேரு அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் விலகினார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான ஜகஜீவன் ராமுக்கும் அநீதி இழைத்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி எப்போதுமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி தான்

ஹிந்து மதம் காரணம்

தனது பேச்சின் போது நாட்டின் கோடிக்கணக்கான ஹிந்துக்களை ராகுல் அவமதித்தார். ஹிந்துக்கள் சகிப்புத்தன்மைக்கு ஆதரவாக உள்ளனர்.100 ஆண்டுகள் ஆனாலும் காங்.,கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகம் தழைத்து ஓங்குவதற்குக் ஹிந்து மதம் தான் காரணம். ஹிந்துக்களை வன்முறையாளர்களாக மாற்ற காங்., சதி செய்கிறது. ஹிந்துக்கள் எப்போதும் வன்முறையாளர்களாக இருந்தது இல்லை.ஹிந்து பயங்கரவாதம் என்ற சொல்லை கண்டுபிடித்ததே காங்., தான். சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதற்காக ஹிந்து கடவுளை காங்., அவமதித்தது. ஹிந்துக்களை அவமதிப்பதை காங், பேஷனாக கருதுகிறது.

சனாதன தர்மம்

சனாதன தர்மத்தை அவமதித்தது காங்., கூட்டணி கட்சியான திமுக.,காங்.,கட்சியின் கூட்டாளிகள் சனாதனத்தை டெங்கு மலேரியா நோய்களுடன் ஒப்பிட்டனர். கூட்டாளிகள் சனாதனத்தை ஒழிப்பது பற்றி பேசிய போது கைதட்டி காங்., கட்சியினர் ஆதரித்தனர்.தேர்தலுக்கு முன்பாக ராகுல் சக்தியை அழிப்பது பற்றி ராகுல் பேசினார்.

ராணுவ சீர்திருத்தம்

ஒரே பதவி,ஒரே ஓய்வூதிய திட்டத்தை காங்., எதிர்த்தது. தேஜ கூட்டணி தான் அமல்படுத்தியது. எந்த சூழலிலும் எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ராணுவத்தை வலிமையாக்க நாங்கள் முயன்று வருகிறோம். ராணுவத்திலும் சுயசார்பை எட்டுவது தான் எங்கள் இலக்கு பாதுகாப்பு துறையில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ராணுவத்தினர் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ராணுவ சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்துவதற்காக காங்., பொய்களை பரப்பி வருகிறது. அக்கட்சி என்றும் இந்திய ராணுவத்தை வலிமையானதாக பார்த்தது கிடையாது. அக்கட்சியினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு பாதுகாப்பு படையினரை வலுவிலக்கச் செய்தனர். பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்தது. யாருக்காக நமது ராணுவத்தை வலுவிழக்கச் செய்ய காங்.,முயற்சி செய்து வருகிறது என்று கேட்க விரும்புகிறேன்.

வினாத்தாள் கசிவு

நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கசிவை தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. வினாத்தாள் கசிவு குற்றவாளிகள் அரசு தப்ப விடாது என உறுதிபட கூறுகிறேன். மாணவர்கள் எதிர்காலத்தில் சமரசம் செய்தவர்கள் ஒருக்காலும் தப்பிக்க முடியாது என உறுதிபடக் கூறுகிறேன். மாணவர்களின் கல்வியில் விளையாடுபவர்கள் தண்டிக்கப்படுவர். கல்வித்துறையை வலிமையாக்க நடவடிக்கை எடுக்கிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது நாட்டின் ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது நமது நோக்கம். நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறது காங்கிரஸ். அதை அனுமதிக்க முடியாது. தேச விரோத செயல்பாடுகளை இந்த நாடு ஒரு போதும் ஏற்றக் கொள்ளாது.

பிரார்த்தனை

தேர்தல் முடிந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். வளர்ச்சி அடைந்த நாடாக பாரதத்தை மாற்றுவதற்கு அனைத்து எம்.பி.,க்களும் உதவிகரமாக இருக்க வேண்டும். நேர்மறையான அரசியல் இன்றைய கால கட்டத்தில் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க எதிர்க்கட்சியினர் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பாடுபட வேண்டும். சிறுபிள்ளை புத்தியுடன் இருப்பவர்களுக்கும் நல்ல புத்திரத வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன். சத்தியத்தின் பலம் என்ன என்பதை பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

2:15 மணி நேரம் பிரதமர் உரை

பிரதமர் மோடி மாலை 4:10 மணிக்கு தனது உரையை துவக்கினார். தொடர்ந்து 2:15 மணி நேரம் உரையாறறிய அவர் 6:27 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Nagercoil Suresh
ஜூலை 03, 2024 06:48

"குழந்தைத்தனமான புத்தி தான் லோக்சபாவில் ஒருவரை திடீரென கட்டிபிடிக்கும்" இதையெல்லாம் குறையகக்கூடாது, பிரதமருடைய வயதிற்கு ராகுல் குழந்தை தான், அதிலும் ஒரு பிரதமர் அல்லது சக இந்தியரை தான் மரியாதை நிமித்தமாக கட்டி பிடித்தது வெளிநாட்டவரை கிடையாது. அரசியல் கட்சிகள் அரைத்த மாவையே திருப்பதிரும்ப அரைக்காமல் நாளைய திட்டங்களை குறித்து பேசுவது தான் இவ்ளவு பெரிய தொகையை சிலவு செய்து கூட்டத்தை கூட்டுவதற்கு அழகு..


ராமகிருஷ்ணன்
ஜூலை 03, 2024 06:33

டூபாகூர் காந்தி குடும்பம் ஒரு முஸ்லிம் குடும்பம், போலி இந்துக்கள் என்று சொல்வதால், ராவுலு தீவிரவாதிகள் என்று சபையில் அலும்பு பண்ரார்.


kannan sundaresan
ஜூலை 02, 2024 22:17

மோடிஜீ ஒரு அனுபவம் பெற்ற சிறந்த தலைவர்.அவருடைய பேச்சிலிருந்தே நாம் அறிய முடியும்


Karunakaran
ஜூலை 02, 2024 22:12

ஐயா எதிர் கட்சி தலைவர் பேசியதை ஊடகங்களில் கேட்டேன் அவர் ஒட்டு மொத்த ஹிந்துக்களை சொல்லவில்லை. நீங்கள்தான் மொத்த ஹிந்துக்களையும் சேர்த்து சொல்கிறீர்கள். இவ்வாறு சொல்வதுதான் சிறுபிள்ளை தனமாக உள்ளது . பிஜேபி என்றால் மொத்த ஹிந்துக்கள் அல்ல.


ராமகிருஷ்ணன்
ஜூலை 03, 2024 10:09

யார் இந்து யார் இந்து இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் யார், மொதல்லே அதை சொல்லு.


Srinivasan Coimbatore
ஜூலை 02, 2024 22:10

I'm missing the two bjp loyalists fighting for TN, one Ramesh Sargam and other Kasimani Baskaran last few days..one is from Singapore and other is from Bengaluru..both will spend all their time here commenting by giving all their support to BJP for TN though they both don't live in this state ? pls both guys start commenting. We miss ur comedy..imagine their mindset when they got to know that dmk team won 40/40..?


Siva Subramaniam
ஜூலை 02, 2024 21:13

பார்லிமென்டில் இப்படித்தான் நடக்கவேண்டும் என்ற நியதியே கிடையாதா? கூச்சலும் குழப்பவும் மட்டுமே? இப்படிப்பட்டவர்களையே மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். பண விரயம் மற்றும்ந கால விரயம்.


Amruta Putran
ஜூலை 02, 2024 20:13

Congress became anti Hindu after Lokamanya Thilak


Amruta Putran
ஜூலை 02, 2024 20:12

Congress has become anti national party after independence


Balasubramanian
ஜூலை 02, 2024 20:11

இனியாவது டகா டக் மற்றும் துட்டுக்கு ஓட்டு இல் மயங்க மாட்டார்கள் என நம்புவோம்!


Bye Pass
ஜூலை 02, 2024 21:21

கடாக்கட் கடாக்கட் ..


Narayanan Muthu
ஜூலை 02, 2024 20:08

எந்த ஹிந்துக்கள் மோடி ஜால்றா இந்துக்கள் பிஜேபி ஹிந்துக்கள் RSS ஹிந்துக்களா. உங்களின் ஹிந்து முகமூடி இனி எடுபடாது என்பதை வரும் காலங்களில் மக்கள் உங்களுக்கு உணர்த்துவார். அயோத்தியில் ஹிந்துக்களே இல்லையா என்ன.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை