மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
ஹைதராபாத் தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று சபை கூடியதும் முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில் சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு, புகையிலைப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.அப்போது அவர் கூறுகையில், “இளம் தலைமுறையினரை பாதிக்கக்கூடிய ஹூக்கா பார்களுக்கு தடைவிதிக்கப்படும். சிகரெட் புகைப்பதை விட, ஹூக்கா அதிக தீங்கு விளைவிக்கக்கூடியது,'' என்றார்.இதையடுத்து, இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக ஒரு மனதாக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
7 hour(s) ago | 2
13 hour(s) ago