மருத்துவமனை தீ விபத்து பலி 17 ஆனது
ஜான்சி: உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மஹாராணி லட்சுமி பாய் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த 15ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த விபத்தில், 10 குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்தனர்; 39 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஐந்து பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இரு குழந்தைகள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை, 17 ஆக அதிகரித்துள்ளது.இதுகுறித்து மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் நரேந்திர சிங் செங்கர் கூறுகையில், “உயிரிழந்த இரு குழந்தைகளும் உடல்நல குறைவால் இறந்தன. இந்த குழந்தைகள், தலா 800 கிராம் எடை மட்டுமே இருந்தன,” என்றார்.