உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை லைசென்ஸ் சஸ்பெண்ட்: உச்சநீதிமன்றம்

குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை லைசென்ஸ் சஸ்பெண்ட்: உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,'' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உ.பி.,யில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. அதன் பிறகு குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.இந்நிலையில் ஜாமின் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நாடு முழுதும், குழந்தை கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அனைத்து உயர்நீதிமன்றங்களும் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த வழக்கை தினமும் விசாரித்து ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். மருத்துவமனையில் இருந்து எந்த குழந்தையாவது கடத்தப்பட்டால், முதலில் அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த பின்னர், அந்த குழந்தை காணாமல் போனாலும், மருத்துவமனையின் லைசென்சை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அலட்சியம் செய்தால், அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.மேலும், குற்றவாளிக்கு ஜாமின் அளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நீதிபதிகள் விமர்சித்ததுடன், மேல்முறையீடு செய்யாதது ஏன் என உ.பி., அரசுக்கு கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஏப் 15, 2025 20:34

சரியான உத்தரவு.


RAMAKRISHNAN NATESAN
ஏப் 15, 2025 19:43

அப்படிப் பார்த்தா மதுரை ராசாசி மருத்துவமனையை இழுத்து மூடவேண்டி வரும்...


Ram
ஏப் 15, 2025 19:10

ஒரு வேளை அரசு மருத்துவமனையில் தவறு நடந்தால்??


Nagarajan D
ஏப் 15, 2025 17:48

லஞ்ச பணம் நீதிபதி வீட்டில் கைப்பற்றப்பட்டால் நீதிபதி இடமாற்றம், லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டால் அரசு ஊழியர்கள் இடமாற்றம்... நாட்டின் சட்டத்தையும் நீதியையும் காப்பாற்றவேண்டியவன் லஞ்சம் வாங்கியிருந்தால் அவனை மட்டும் இடமாற்றம் செய்கிறீர்களே அது எப்படி சரியாகும். குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் சஸ்பெண்ட் ஆவதை போல லஞ்ச பணம் வாங்கிய அரசு ஊழியர்களையும் நீதியட்டற்ற நீதிபதிகளையும் நிரந்தர பணிநீக்கம் செய்யுங்களேன் அவர்களின் எல்லா சொத்துக்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடமை செய்யுங்கள்... நீதியற்ற நீதித்துறை ஒரு முன் மாதிரியாக இருக்கலாமே...


shakti
ஏப் 15, 2025 17:15

அனாதை இல்லங்களை அரசுடமை ஆக்கினாலே போதும் , குழந்தை கடத்தல் நின்று விடும் .... எண்ணிக்கை கூட்டி காட்டி டொனேஷன் வாங்கவே பெரும்பாலும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன


என்றும் இந்தியன்
ஏப் 15, 2025 17:13

ஆனால் நீதிபதி தான் அதை செய்தது என்றால் அவரை transfer செய்து விடும் இந்த உச்ச அநீதிமன்றம்


எம். ஆர்
ஏப் 15, 2025 16:52

எசமா எங்களுக்கு எது சாதகமா இருக்குமோ அதில் மட்டும்தான் நாங்க மேல் முறையீடு செய்வோம் சாமி


GMM
ஏப் 15, 2025 15:18

குழந்தை கடத்தலை தவிர்க்க மாநில போலீஸ் மருத்துவ மனை பாதுகாப்பில் நியமித்து இருக்க வேண்டும். போலீஸ் பணி பொது சொத்துக்களை 24 மணி நேரம் பாதுகாத்தல். மருத்துவம் அவசரம், அத்திவாசிய பணி . முடக்கினால், ஏராள மக்கள் இறந்து விடுவர் . இந்தியாவில் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்ய நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.?


V Venkatachalam
ஏப் 15, 2025 15:14

உயர்திரு பால குருசாமி அவர்கள் வீட்டில் சாணம் தெளித்து க.உ.பி க்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஐயா பால குருசாமி அவர்களே தாங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.


புதிய வீடியோ