உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலின் நண்பராக இருப்பது எப்படி: பா.ஜ., கேள்வி

இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலின் நண்பராக இருப்பது எப்படி: பா.ஜ., கேள்வி

புதுடில்லி : காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி புகழ்ந்த நிலையில், 'இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலின் நண்பராக இருப்பது எப்படி?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியது. பாசிட்டிவ் மனநிலை மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியா, பாக்., இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி - 20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கடந்த 14ல் நடந்த லீக் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இது தொடர்பாக, பாகிஸ்தானின் 'சம்மா டிவி'யில் நடந்த விவாத நிகழ்ச்சியில், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறுகையில், “இந்தியாவில் உள்ள தற்போதைய அரசு, ஆட்சி அதிகாரத்தில் எப்போதும் நீடிக்க, ஹிந்து - முஸ்லிம் விளையாட்டை விளையாடுகிறது. ''இது மிகவும் மோசமான மனநிலை. காங்., தலைவர் ராகுல் மிகவும் பாசிட்டிவ் மன நிலையை கொண்டுள்ளார். பேச்சு மூலம் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதில் அவர் உறுதியாக உள்ளார். நீங்கள் இன்னொன்றாக மாற முயற்சிக்க ஒரு இஸ்ரேல் போதாதா?” என்றார்.

புகழ்ந்துள்ளார்

இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறுகையில், “பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பின், ராகுலை ஷாஹித் அப்ரிடி புகழ்ந்துள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. நம் நாட்டை வெறுக்கும் அனைவரும், ராகுலின் நண்பராக இருப்பது எப்படி?” என, கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பேசும் தமிழன்
செப் 17, 2025 20:27

உண்மையில் ராகுல் என்ற பப்பு தான் பிஜெபி கட்சியின் பிரசார பீரங்கி..... அவர் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருப்பதால் தான்.... நாட்டு மக்கள் வெறுத்து போய் பிஜெபி க்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கிறார்கள்.


Venugopal S
செப் 17, 2025 15:12

இந்தியாவை வெறுப்பவர்களை உங்கள் எதிரிகள் போல் நீங்கள் காட்டிக் கொள்வது எப்படியோ அப்படித்தான்!


KRISHNA
செப் 17, 2025 11:28

தேசபக்தியும், தெய்வபக்தியும், மக்கள் நலனில் அக்கறை உள்ள பா ஜ க, ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, அயோக்கியர்களை, செம்மையா சுளுக்கெடுக்க வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 17, 2025 11:26

பிஜெபி யின் மிகப்பெரிய பலமே ராகுல்தான். வேறு யாரும் எதிர்கட்சித் தலைவராக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.


Vasan
செப் 17, 2025 10:00

Pakistan cricket players praised Modi also few years back. Why you didnt raise this question at that time?


SELVA KUMAR P
செப் 17, 2025 09:54

இல்லை இத்தாலி குடிமகன்


baala
செப் 17, 2025 09:46

வெறுப்பவர்களை கூட நாம் ஏற்று கொள்ளலாம். தேச பக்தி என்கிற பெயரில் இந்தியாவை கொள்ளை அடிப்பவர்கள், வாக்கு திருடி ஆட்சிக்கு வருபவர்கள், மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள், பெண்களை சூறையாடுபவர்கள் இவர்கள் எல்லாம் எப்படி என்பதை பற்றியும் பேசுங்கள்.


Barakat Ali
செப் 17, 2025 09:14

உருப்படியான ஆளு யாராச்சும் எதிர்கட்சித் தலைவரா வந்தா உங்க பொழப்பு ஆட்டம் கண்டுரும் .....


pmsamy
செப் 17, 2025 07:57

ராகுல் காந்தி மேல அவ்வளவு பயம் இருக்கு பாஜகவுக்கு குற்றமுள்ள மனசு குறுகுறுக்குது


Arjun
செப் 17, 2025 10:16

துரோகிகளை கண்டு பயந்துதான் ஆகவேண்டும்


பேசும் தமிழன்
செப் 17, 2025 07:42

இனம் இனத்தோடு தானே சேரும் ....அவர்களுக்கு தெரியும் நம்மை விட இந்தியாவுக்கு கேடு நினைக்கும் ஆட்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று.... அதில் ஒருவர் பப்பு என்று தெரிந்த காரணத்தால் தான் அவரை பாராட்டி தள்ளுகிறார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை