உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய குடியுரிமை பெறும் முன் வாக்காளராக சேர்ந்தது எப்படி? சோனியாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

இந்திய குடியுரிமை பெறும் முன் வாக்காளராக சேர்ந்தது எப்படி? சோனியாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியாவுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா, ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிறந்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவை, 1968ல் காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, 1983ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றார். அதற்கு முன்னதாக, 1980ம் ஆண்டே சோனியாவின் பெயர் டில்லி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடும்படி, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, கடந்த செப்., 11ல் விசாரித்த கூடுதல் சிறப்பு மாஜிஸ்திரேட் வைபவ் சவுரஷியா பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, இந்த நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. எனினும், இந்த தவறை தேர்தல் கமிஷன் அப்போதே கண்டறிந்து சோனியாவின் பெயரை, 1982ல் நீக்கியது. அதன்பின், 1983ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றபின், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுதவிர, இவ்வழக்கில் வாக்காளர் பட்டியலின் நகல் மட்டுமே மனுதாரர் இணைத்துள்ளார். இது, குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை. எனவே, சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய அவசியமில்லை. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து விகாஷ் திரிபாதி டில்லி நீதிமன்றத்தில் சமீபத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி சோனியா மற்றும் டில்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 12:23

எப்படியா


Mahendran Puru
டிச 10, 2025 11:44

காழ்ப்புணர்ச்சியில் உச்சம் காண்போம் தினமும். என்னதான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சர்வ காலமும் பயம் இருக்கே, ஐயோ பாவம்


vivek
டிச 10, 2025 17:35

அது எப்படி திமிங்கலம்...உனக்கு மட்டும் இன்னும் முட்டு குடுக்க மனசு வருது


சிந்தனை
டிச 10, 2025 10:39

அச்சச்சோ என்ன ஆச்சு அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டீங்க இன்னும் ஒரு நூறு வருஷம் கழிச்சு கேட்டிருக்கலாமே


R K Raman
டிச 10, 2025 10:31

பெயர் இருந்தது ஆனால் வாக்கு அளித்தாரா? இது பற்றி ஏன் விபரம் இல்லை?


kumar jays
டிச 10, 2025 10:18

ஆட்சி அவங்க கையில் என்னவேனாலும் பன்னலாம்


Thravisham
டிச 11, 2025 06:53

நீதிபதிகளே இக்கேள்வியை நீங்கள் சுப்ரமணியன் சாமியிடம் கேட்டிருந்தால் சோனியாவின் ஆதி மூலத்தை புட்டு புட்டு வைத்திருப்பார். 43 வருட கேஸுக்கு ஒரேய நாளில் உண்மையான தீர்ப்பு கொடுத்திருப்பார்


Ramesh Trichy
டிச 10, 2025 09:57

உப்பு சப்பு இல்லாத கேஸ். இன்னும் 25 வருடங்கள் ஆகும், அதற்குள்ள யாரு இருப்பாங்கனு தெரியாது.


M S RAGHUNATHAN
டிச 10, 2025 09:06

INDI கூட்டணி கட்சிகள் வாய் திறப்பார்களா ? குடியுரிமை இல்லாத ஒரு அயல் நாட்டவர் இந்திய தேர்தலில் வாக்களித்தால் சட்டம் என்ன தண்டனை சொல்கிறது. அதை சோனியாவுக்கு வழங்க வேண்டும் என்று INDI கூட்டணி கட்சிகள் குரல் எழுப்புமா ? இவர்கள் அரசியல் அமைப்பு சாசனம் பாதுகாப்பு பற்றி உளறுகின்றனர்


aaruthirumalai
டிச 10, 2025 09:03

சோனமுத்தா போச்சா


பேசும் தமிழன்
டிச 10, 2025 08:28

பப்பு இது தான் ஓட்டு திருட்டு.... இது போல் ஏராளமான போலி வாக்காளர்களை கான் கிராஸ் கட்சி ஆட்கள் சேர்த்து வைத்து இருப்பார்கள் போல் தெரிகிறது.... அதனால் தான் SIR வே‌ண்டா‌ம் எ‌ன்று இண்டி கூட்டணி ஆட்கள் எல்லாம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.


ram
டிச 10, 2025 07:33

தன்னிடமே தப்பை வச்சுக்கிட்டு ...


சமீபத்திய செய்தி