UPDATED : ஜூலை 23, 2024 03:39 PM | ADDED : ஜூலை 23, 2024 12:59 PM
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்*அன்னிய முதலீடுகளுக்கான கொள்கைகள் எளிமையாக்கப்படும்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9x7sedmo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0*தொழில் துவங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டு வரப்படும்*சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிடும் Sidbi வங்கி கிளைகளை மேலும் 24 இடங்ளில் நிறுவ முடிவு.*வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், உத்தரகண்ட், சிக்கிம் மாநிலங்களுக்கு மறுகட்டமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு நிதி வழங்கப்படும்.*பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5 கோடி நிதி வழங்கப்படும்*25 ஆயிரம் ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. *உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு*வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதை மேலும் விரிவாக்கம் செய்யத் திட்டம்.*நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.9 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை*அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் விதிகள் எளிமையாக்கப்படும்.*நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக இருக்கும்*நீர்பாசன வசதிகள் ரூ.11,500 கோடி*நாட்டின் உளகட்டமைப்புக்கு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு*உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீத உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு*இளைஞர் முன்னேற்றத்திற்கு ரூ.2 லட்சம் கோடி*நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி*சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கடன் வரம்பு ரூ.100 கோடி ஆக அதிகரிப்பு*பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.1-0 லட்சம் கோடி *புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி*பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக ரூ. 3 லட்சம் கோடி*ஊரக வளர்ச்சி ரூ.2,65,808 கோடி*கல்வித்துறைக்கு ரூ.1,25,638 கோடி*விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு* பாதுகாப்புத்துறைக்கு ரூ.4,54,773 கோடி ஒதுக்கீடு* வேளாண்மை தறைக்கு ரூ.1,51,851 கோடி ஒதுக்கீடு* தொழில்நுட்படம் மற்றும் தொலைத்தொடர்புத்துறைக்கு ரூ.1,16,342 கோடி ஒதுக்கீடு* சுகாதாரத்துறைக்கு ரூ.89,287 கோடி ஒதுக்கீடு* எரிசக்தி துறைக்கு ரூ.68,769 கோடி ஒதுக்கீடு* வணிகம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.47,559 கோடி ஒதுக்கீடு.