உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவ கல்லுாரிகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் அம்பலம்!: ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற 34 பேர் சிக்கினர்

மருத்துவ கல்லுாரிகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் அம்பலம்!: ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற 34 பேர் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளை நிர்வகிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பில், ஊழல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, 'நெட்வொர்க்'கை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் உட்பட 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை வழங்க, 55 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், தேசிய மருத்துவ கமிஷனைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் அடங்கிய எட்டு பேரை, சமீபத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் எட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள், இடைத்தரகர்கள் வாயிலாக மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகளுக்கு சில ரகசிய கோப்புகள், ஆவணங்களை அளித்துள்ளனர். இதற்கு கைமாறாக பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது. இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து மருத்துவக் கல்லுாரிகளில், தேசிய மருத்துவ கமிஷன் சார்பில் அந்த அதிகாரிகள் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லுாரிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, எதுவும் தெரியாதது போல் அங்கு சென்று அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். மேலும், என்ன மாதிரியான ஆய்வு நடக்கப் போகிறது என்பதையும் அவர்கள் முன்கூட்டியே தெரிவித்துள்ளனர். இதனால், கல்லுாரியின் உள்கட்டமைப்புகளை தற்காலிகமாக உருவாக்கியதுடன், போலியாக பல பேராசியர்களையும் அவர்கள் கணக்கு காட்டி நற்சான்று பெற்றுள்ளனர்.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களின் ஒழுங்குமுறை நிலை மற்றும் செயல்பாடு தொடர்பான முக்கியமான தகவல்கள், சில கல்லுாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கல்லுாரிகள் ஆய்வின் போது பல்வேறு ஏமாற்று வேலைகளும் அரங்கேறி உள்ளன. சாதகமான அறிக்கையை பெற ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு கல்லுாரி நிர்வாகங்கள் லஞ்சம் கொடுத்துள்ளன. இந்த மோசடியின் நெட்வொர்க் கும்பலை கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் பூனம் மீனா, தரம்வீர், பியூஷ் மல்யன், அனுப் ஜெய்ஸ்வால், ராகுல் ஸ்ரீவஸ்தவா, தீபக், மனிஷா, சந்தன் குமார் ஆகிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் தலைவர் டி.பி.சிங், கீதாஞ்சலி பல்கலை பதிவாளர் மயூர் ராவல், ராவத்புரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்டு ரிசர்ச் தலைவர் ரவிசங்கர் ஜி மஹாராஜ், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லுாரி தலைவர் சுரேஷ் சிங் படோரியா உட்பட, 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருந்தியல் கவுன்சில்

தலைவர் வீட்டில் 'ரெய்டு'இந்திய மருந்தியல் கவுன்சில் தலைவராக மோன்டு எம்.படேல் உள்ளார். இவரது தலைமையிலான அதிகாரிகள், மருந்தியல் கல்லுாரிகளுக்கு முறைகேடாக ஒப்புதல் வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், கல்லுாரிகளில் எந்தவிதமான ஆய்வும் நடத்தாமல் நற்சான்று அளித்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் அளித்த புகாரின்படி மோன்டு எம்.படேல் மீது ஊழல் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அவரது வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Balasubramanian
ஜூலை 05, 2025 16:45

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் இந்த பட்டியலில் இருக்கிறாரா.


அப்பாவி
ஜூலை 05, 2025 15:23

இவிங்கள்ளாம் நேருவோட அல்கக்கைகள். பா.ஜ அரசு அதிகாரிகள் அல்ல. எல்லோரும் வடக்கன்ஸ் பேராக இருக்கு பாத்தீங்களா. பா.ஜ ஆளுங்க ரொம்ப நல்லவங்க.


Balaji
ஜூலை 05, 2025 11:56

ஏற்கனவே, 2011ல் இது போல நடந்து, தலைவர் பிடிபட்டார். ஆனால், அவர் துறை ரீதியான விசாரணை என்று கூறி, அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.


venugopal s
ஜூலை 05, 2025 10:09

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லோரும் திராவிடர்கள், இதற்கெல்லாம் மூல காரணம் நேரு தான் என்று உருட்ட இன்னும் ஒருவரும் வரவில்லையே!


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 09:55

மருத்துவக் கல்லூரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். எண்பதுகளில் நாடு முழுக்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்ததிலிருந்து இந்த அங்கீகார ஊழல் நடக்கிறது. எதிர்ப்பவர்கள் மிரட்டி அடக்கப்படுகிறார்கள். BIOMETRIC வருகைப் பதிவேடு போன்ற ஏராளமான விதிகள் கட்டுப்பாடுகளை விதித்தும் பலனில்லை. எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்கிவிடுவதே தீர்வு.( ஒரே பெரிய பிரச்சினை நீதிபதிகளுக்கு நெருக்கமான VIP க்க‌ள் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளை நடத்துவதுதான்).லட்சக்கணக்கான Allied மெடிக்கல், பார்மஸி பட்டய, பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படும் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி தரகர்கள் மூலம் மாணவர்களை சேர்கிறார்கள். வடகிழக்கு தவிர மற்ற இடங்களில் புதிய கல்லூரிகளை துவக்க அனுமதிக்கக் கூடாது.


Mahendran Puru
ஜூலை 05, 2025 08:52

ஏற்கனவே இதுபோல நடந்து அந்த மருத்துவ கவுன்சில் தலைவர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் அவர் பாஜகவில் இணைந்து விட்டார். இம்முறையும் அதுவே நடக்கும். சம்பாதித்ததில் கட்சி நிதி கொடுத்துவிட்டால் சிபிஐ தூங்கி விடும். இந்த ED CBI எல்லாம் காலெக்ஷன் ஏஜென்ட்கள் தானே.


D Natarajan
ஜூலை 05, 2025 08:17

இது ரொம்ப சகஜம். தமிழ் நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளி ல் இது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று. லஞ்சம் எங்கும் தலைவிரித்து ஆடுகிறது. இவ்ரகளுக்கு தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆகும் . கடவுள் கூட நாட்டை காப்பாற்ற முடியாது. முக்கிய காரணம் பேராசை பிடித்த கேடுகெட்ட வக்கீல்களும் நீதிபதிகளும். உலகத்திலேயே மோசமான நீதி துறை இந்தியாவில் உள்ளது


அப்பாவி
ஜூலை 05, 2025 06:31

இதெல்லாம் 2014 க்கப்புறம் நடந்திச்சு. நேரு தான் காரணம். அப்பவே காடு வாங்கிட்டு போயிட்டார். அப்புறம் காங்குரஸ், இந்திராகாந்தி, ராஜுவ் தான் காரணம். நாங்க ரொம்ப நல்கவங்க. இந்தியா வல்லரசாயிடிச்சு. ஏ அம்ரித்கால் ஹை. கானா வே விருது க்ய்டுத்திரிச்சு. அடுத்தது அர்ஜெண்டினா ஹை. உனக்கு பொறாமை ஹை.


raja
ஜூலை 05, 2025 09:08

கொத்தடிமையே... கருணாநிதி கல்வி அமைச்சரா இருந்தபோதும் முதல்வரா இருந்த போதும் அரசு கல்லூரிகளின் மருத்துவ தேர்வு லிஸ்ட்டை வெளியிடும் முன்பே அதை சிதம்பரத்தில் உள்ள பல்கலைக்கழக செட்டியாரிடம் கொடுத்து அதே லிஸ்டையே அவர்களும் தேர்வு செய்து பின் இரண்டாம் லிஸ்ட்இல் வெளியில் தெரியாமல் பணம் வாங்கி கொண்டு இடங்களை நிரப்பியதற்கு கைமாறாக கோடிக்கணக்கில் பணம் பெற்றோம் என்று ஆற்காடு வீராசாமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த டூப் வீடியோவை பார்த்துவிட்டு கருத்து போடு...


raja
ஜூலை 05, 2025 09:16

இன்னும் ஏன் அண்ணா பல்கலை கழக கவுன்சிலிங் ஆரமிக்க வில்லை என்று புரிகிரதா கொத்தடிமையே...மாணவர்களும் பெற்றோர்களும் அவசரப்பட்டு இப்போ தங்களது பிள்ளைகளை தனியார் கலோரிகளிலும் நிகர்நிலை பல்கலை கலகங்களும் சேர்த்து விட்டார்கள்..கல்லூரிகளும் வகுப்புகளை தொடங்கி விட்ட நிலையில் இனி அரசு கல்லூரி கிடைத்தாலும் ஒருசில மாணவர்களை தவிர மற்றவர்கள் கொடுத்த கட்டணம் திரும்ப வராது என்பதால் இனி மாறமாட்டார்கள் என்ற நிலை வந்தவுடன் அரசி கவுன்சிலிங்கை ஆரமிக்கும்.... இதில் எவ்வளவு கோடிகள் கை மாறும் திருட்டு திராவிடர்களுக்கு என்று உனக்கு தெரியுமா....


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 10:03

தி.மு.கவின் காந்திசெல்வன், குலாம் நபி ஆசாத் சுகாதாரத் துறை பொறுப்பிலிருந்த காலத்தில் முறைகேடுகளால்தான் நீட் தேர்வை சுப்ரீம் கோர்ட் கட்டாயமாக்கியது. ஜகத் போன்ற சாராயக் கம்பெனி மூலம் சமூக சேவை செய்பவர்களையும் மருத்துவக்கல்லூரி வணிகத்தில் ஈடுபட ஊக்கம் கொடுத்தது UPA ஆட்சி. முதன்முறையாக தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியை அமைத்தது நேரு, இந்திராவுக்கு நெருக்கமாக இருந்த காங்கிரஸ் ஆள்தான்.


SANKAR
ஜூலை 05, 2025 02:53

arur rung any comment?


புதிய வீடியோ