உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி கொலை கணவர் கைது

மனைவி கொலை கணவர் கைது

சாம்ராஜ் நகர்: குடிபோதையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.சாம்ராஜ்நகர், ஹனுாரின் பிதரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் அமல்ராஜ், 40. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிமித்தமாக, ராம்நகரின் பிடதிக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஷோபா, 35, என்பவர் அறிமுகமானார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருந்தனர்; ஆனால், கணவரை பிரிந்து வாழ்ந்தார்.ஷோபாவும், அமல்ராஜும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஷோபாவையும், குழந்தைகளையும் தன் சொந்த ஊரான, ஹனுாரின் பிதரஹள்ளிக்கு அமல்ராஜ் அழைத்துச் சென்றார். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு தகராறு செய்வர்.ஒரு முறை குடிபோதையில் தகராறு செய்ததால், அமல்ராஜ் சிறைக்கு சென்று வந்தார். நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, காலையில் வீட்டில் பார்ட்டி நடத்தினர். குடிபோதையில் ஏதோ காரணத்தால், வாக்குவாதம் ஏற்பட்டது. பெரிய கல்லால், ஷோபாவின் தலையில் அமல்ராஜ் போட்டு கொலை செய்தார்.அங்கு வந்த ராமாபுரா போலீசார், அமல்ராஜை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை