உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிகளுக்கு பதில் கவுன்சிலர்களாக பதவியேற்ற கணவர்கள்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கேலிக்கூத்து!

மனைவிகளுக்கு பதில் கவுன்சிலர்களாக பதவியேற்ற கணவர்கள்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கேலிக்கூத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்; சத்தீஸ்கரில் மனைவிமார்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுள்ளனர். சத்தீஸ்கரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கபிர்தாம் மாவட்டத்தில் பரஸ்வாரா கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் 6 பெண்கள் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடந்தது. ஆனால் விழாவின் போது வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவன்மார்கள் பதவியேற்றுள்ளனர். பஞ்சாயத்து செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். கணவன்மார்கள் பதவியேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி அஜய் திரிபாதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
மார் 06, 2025 06:58

இந்த எழவையெல்லாம் தானா முன்வந்து சிலர் விசாரிப்பாங்களே? எங்கே போயிட்டாங்க?


Sampath Kumar
மார் 05, 2025 17:14

சபாஷ் வடக்கன் புத்தி பின்ன எப்படி இருக்கும் ? மொலை சல்வை செய்யப்பட்ட பிறவிகள் இவைகள் ஒரு மொழியும் சரியாக யஜஉரியது ஒரு மொழி மட்டும் நாலா புரியும் அதான் பணம் அதுக்கு தணிந்த கூத்து பிஜேபி கரண் உன்னுடைய சீர்திருத்த ?// கொள்கையை இங்கே ஆரம்பி பார்க்கலாம் சேறுப்பு அடி வாங்குவ


தமிழ்வேள்
மார் 05, 2025 19:57

சம்பத்து, ராசா, நீ தமிழில் தயவு செய்து பதிவிடாதே..உன் சலவை மொழி திமுகவின் பேடன்ட்.... வேண்டாம் ஜாமி....


Velan Iyengaar
மார் 05, 2025 15:23

இவனுங்களுக்கு ஹிந்தியே ஒழுங்கா தெரியாதோ ?? இவனுங்க எல்லாம் மூன்று மொழி கத்துக்கிட்டு இந்தியாவ எப்போ முன்னேத்துவானுங்க ??


M S RAGHUNATHAN
மார் 05, 2025 14:22

What are the HC of Chattisgarh and the ministers of Panchayat Raj in state and centre doing ? The person who conducted the swearing and the persons who took oath should have been in jail by now. The District Collector is the primary person against whom the punitive action should have been taken. The BJP leadership will feign ignorance stating the elections to Panchayats are not on party basis. Possible escape route.


ஆரூர் ரங்
மார் 05, 2025 14:21

இங்கேயே பெரும்பாலான உள்ளாட்சித் தலைவிகள் பொம்மைத் தலைவர்கள்தான். அவைக்கூட்டம் நடத்துவது கூட கணவர்கள்தான். கொடியேற்றும் உரிமையைக் கூட கொடுப்பதில்லை. படித்த முன்னேறிய மாநிலம் என்பதெல்லாம் உதார்.


Barakat Ali
மார் 05, 2025 14:05

அவங்கள்லாம் வீட்ல ரொட்டி சுடவேணாமா ????


Oru Indiyan
மார் 05, 2025 14:04

எந்த கட்சி?


Velan Iyengaar
மார் 05, 2025 15:27

இங்க மட்டும் எந்த கட்சி என்று எழுதவில்லை என்றால் மிக சுலபமாக ஒன்று புரிந்துகொள்ளலாம் .... உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சியாக மட்டுமே இருக்கும் ... எதிர்க்கட்சி ஆளுங்க என்றால் அந்த கட்சி பெயரோடு தான் செய்தியே வரும் ...


Ramanujadasan
மார் 05, 2025 13:49

இங்கே மட்டும் என்ன வாழுது ? உண்மையான நேர்மையான அரசியல்வாதிகளுக்கு பதிலாக....


Louis Mohan
மார் 05, 2025 13:44

வடக்கன்ஸ் ... அடிப்படை கல்வி இந்தியிலாவது படிக்க வேண்டும்.


N Sasikumar Yadhav
மார் 05, 2025 14:21

உங்க திராவிட மாடலில் மனைவிகள் பதவியேற்றாலும் கணவன்கள்தான் அனைத்திலும் அதிகாரம் செலுத்துறானுங்க கோபாலபுர கொத்தடிமையார் அவர்களே


சமீபத்திய செய்தி