வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தொழிற்சாலை ஆய்வாளர்ன்னு ஒருத்தர் இருப்பார். அவருக்கு தொழிற்சாலைக்குள் சென்று ஆய்வு செய்ய நேரம் இருக்காது. ஒவ்வொரு பண்டிகைக்கும் வலுவான கவர் சென்று சேர்ந்திடும். முறையான ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற வாய்ப்பே இருந்திருக்காது. ஆலை அதிபரும் அதுபற்றிய அக்கறை இல்லாமல் கண்டுக்காம இருந்ததில் விளைவு இது. எவ்வளவு குடும்பங்கள் சிதைந்து போயின. ஏதாச்சும் இப்படி விபத்துக்கள் வந்தால் மட்டுமே அதற்காக அரசியல் தலைகள் பேசுவார்கள். அடிப்படை அறிவாற்றலும் அனுபவமும் உள்ளவர்களை பணியில் அமர்த்தமாட்டார்கள். காரணம் கூடுதல் சம்பளம் கொடுக்கணும் என்கிற எண்ணம்தான். இப்போது ஆலையை இழுத்து மூட வேண்டியதுதான். தொழில்துறை அமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது. வசூலை சரியாக செய்வர். படித்து வந்த ஐ ஏ எஸ் அதிகாரிகளும் சொத்து சேர்ப்பதில் குறியாக இருக்கின்றார்கள் அரசியல்வாதிகளுக்கு போட்டியாக. யாரைத்தான் நம்புவது இந்த அப்பாவி ஜனங்கள். படித்தவர்களுக்கு வாக்களிக்க சொன்னால் வெறும் ஐநூறு ரூபாய்க்கு ஓட்டுப்போட்டு கண்ட கழிசடைகளுக்கு பணத்துக்காக ஓட்டுப்போட்டு தேர்வு செய்து இப்படி வாழ்வை தொலைக்கின்றார்கள். இறைவன் கூட இந்த மாதிரி ஆட்களை தண்டிக்கவும் மாட்டார். விதியை நொந்துகொண்டு வாழ்வை நகர்த்துவது தான் தலையெழுத்து போல
வெடித்தது பாய்லர் அல்லது ரியாக்டர் மற்றும் சுமார் 150 பேர்கள் பணியாற்றியதாகவும் செய்திகள் கூறுகின்றன. பாய்லர் அல்லது ரியாக்டர் பகுதியில் இத்தனை பணியிலிருக்கும் சூழ்நிலை ஷட்டவுன் நேரத்தில் மாத்திரமே நடக்கும். அப்போது ஏதும் முறையான பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு நடந்திருக்கும். Blinding அல்லது Log Out Tag Out சரியாக இருந்திருக்காது. ஒரு சின்ன தீப்பொறி போதுமானது இந்த சம்பவம் நடக்க. மற்றபடி தொழிற்சாலை இயங்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றால் உயிரிழப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மிக அதிக ஒலியளவில் சப்த்தத்துடன் மிகப்பெரிய தீ விபத்துதான் தொழிற்சாலையில் ஏற்படும். அரசின் தொழிற்சாலை ஆய்வாளருக்கு இதில் சம்பந்தம் ஏதும் கிடையாது. இது முழுக்க முழுக்க தொழிற்சாலை இயக்கியர்களின் அறிவின்மை. பாவம் 40க்கும் மேற்பட்ட பராமரிப்பு பணியார்களை காவு வாங்கிவிட்டார்கள். தொழிற்சாலையின் பாதுகாப்பு ஆய்வாளரை Company safety officer விசாரிக்கவேண்டும்.