உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்.. கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி: மேரி கோம்

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்.. கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி: மேரி கோம்

மஹா கும்பநகர் : உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த 13ல் துவங்கியது. பிப்., 26 வரை இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 10 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 42, மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, பிரயாக்ராஜுக்கு நேற்று வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார்.இதன் பின், செய்தியாளர்களிடம் மேரி கோம் கூறுகையில், ''மஹா கும்பமேளாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி. இது தான் என் முதல் அனுபவம். ''நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கும்பமேளாவுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இதில் பங்கேற்றது மகிழ்ச்சி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Barakat Ali
ஜன 29, 2025 16:52

எங்க ஊருலயும் சனாதனத்தை வேரறுக்க கெளம்புனவரு வாய்க்கு வாய் நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் ன்னு சொல்றாரும்மா ....


Sundar R
ஜன 29, 2025 09:33

மேரி கோபம் பரம கஷ்டத்தை அனுபவித்த குடும்பத்திலிருந்து வந்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்த போது ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர். தேசப்பற்று மிகுந்தவர். இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் எல்லோரும் பாராட்டும்படியாகவும், பின்பற்றும் வகையிலும் இருக்கிறது.


அப்பாவி
ஜன 29, 2025 09:31

இதுதான் உண்மையான ஞானஸ்னானம்.


Tetra
ஜன 31, 2025 12:10

ஹிந்து ஆயிட்டாரா?


N.Purushothaman
ஜன 29, 2025 07:30

சமூகநீதியை காப்பாத்த இது அவசியம் ....


N.Purushothaman
ஜன 29, 2025 11:10

திராவிட மேளா கூவத்தில் எப்போது நடக்கும் என்பதை பார்க்க ஊப்பிங்க எல்லாம் ஆர்வமா இருக்காங்க ...


நிக்கோல்தாம்சன்
ஜன 29, 2025 07:16

வாழ்த்துக்கள், இது தான் உண்மையான சனாதனம் என்பது சில இளவரசர்களும் புரியாமல் இருக்கலாம், மேலும் தமிழ் சினிமா நடிகரும் தீவிர கிறிஸ்துவத்தை பின்பற்றும் நடிகருமான பிரகாஷ் ராய் யும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார் என்ற செய்திகளும் எங்களுக்கான குரூப்பில் வலம் வருகிறது


Palanisamy Sekar
ஜன 29, 2025 07:08

ஒரிஜினல் எப்போதுமே ஜொலிக்கும்தான்.


raj82
ஜன 29, 2025 06:59

ஒரு பத்ம பூச அவார்ட் பார்சல்


V வைகுண்டேஸ்வரன்,chennai
ஜன 29, 2025 08:41

raj 82, ஆமாம். பத்மா பூஷண் இல்லைன்னா அறிவாலய விருது


அப்பாவி
ஜன 29, 2025 06:37

உங்க ஆதரவு இருந்தாலும் இல்லாட்டாலும் கும்பமேளா நடக்கும். நீங்கள்ளாம் ஒண்ணும் ஜெருசேலத்திலிருந்து வந்து குதிச்சுடலை. இங்கே மதம் மாறியவங்கதான்.


Bye Pass
ஜன 29, 2025 06:19

திரும்ப ஞானஸ்தானம் செய்து விடாமல் இருக்கணுமே..


Senthoora
ஜன 29, 2025 06:12

நீங்க செய்தவிடயம் பாராட்டலாம்,


சமீபத்திய செய்தி