உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிரோடுதான் இருக்கிறேன்! நடிகை பூனம் சொதப்பல்

உயிரோடுதான் இருக்கிறேன்! நடிகை பூனம் சொதப்பல்

மும்பை: ''கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் பாதிக்கப்படவில்லை; நான் உயிருடன் இருக்கிறேன்,'' என, பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தெரிவித்து உள்ளார்.கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை பூனம் பாண்டே, 32, நேற்று முன்தினம் காலமானதாக தகவல் வெளியானது. இத்தகவலை, சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக, அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர். இதனால், பூனம் பாண்டேவின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், இத்தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 'இது போன்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், திடீரென உடனடியாக இறக்க வாய்ப்பில்லை. பூனம் பாண்டே கடந்த வாரம் வரை சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்' என பலரும் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நேற்று 'வீடியோ' வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே கூறியுள்ளதாவது:நான் உயிருடன் இருக்கிறேன்; கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் பாதிக்கப்படவில்லை. ஆனால், அந்த நோயால் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இச்செயலில் எங்கள் குழுவினர் ஈடுபட்டோம்.மற்ற புற்றுநோய்களைவிட, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை நம்மால் முற்றிலும் தடுக்க முடியும். இதற்காக குறிப்பிட்ட வயதில் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், மத்திய அரசு அறிவித்துள்ள ஹெச்.பி.வி., தடுப்பூசியையும் செலுத்திக்கொள்வது அவசியம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளவே, இதுபோன்ற செயல்களில் பூனம் பாண்டே ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் இவருக்கு எதிராக விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை