உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' லோக்சபாவில் என்னை பேச அனுமதிக்கவில்லை'', என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். அதேநேரத்தில் அவையில் விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.

இடமில்லை

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: பார்லிமென்டில் என்ன நடக்கிறது என புரியவில்லை. லோக்சபாவில் பேசுவதற்கு நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால், வாய்ப்பு வழங்காமல் கிளம்பி சென்று விட்டார். அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். தேவையில்லாமல் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவில் பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்குவது வழக்கம். எப்போது எல்லாம் நான் எழுந்து நின்றாலும், நான் பேசுவதை தடுக்கின்றனர். இதனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்துள்ளேன். 7-8 நாட்களாக பேச அனுமதிக்கப்படவில்லை. இங்கு ஜனநாயகத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடமில்லை. மஹா கும்பமேளா குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் பேச விரும்பினேன். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகரின் அணுகுமுறை குறித்து புரியவில்லை. ஆனால், நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. என்றார்.

எதிர்பார்ப்பு

இது தொடர்பாக லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: இந்த சபையின் புனிதத்தன்மை மற்றும் உயர்ந்த மரியாதையை நீங்கள்( ராகுல்) நிலைநிறுத்துவீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல எம்.பி.,க்களின் நடவடிக்கை அவ்வாறு இல்லை என்பதற்கு பல சம்பவங்கள் உள்ளன. தந்தைகள், மகள்கள், தாயார்கள், மனைவி மற்றும் கணவன் இந்த சபையின் உறுப்பினர்களாக இருந்து உள்ளனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் விதிப்படி நடக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

raju
மார் 27, 2025 11:54

பிஜேபி க்கு ஜனநாயகம்ன்ன என்ன என்று தெரியாது . நாய் தெங்கம்பழம் தெங்கம்பழம் .அதனால் பேசினாலும் புரயோசனம் இல்லை


kumarkv
மார் 27, 2025 11:00

பேசி என்னத்த பண்ணபோறீங்க


vadivelu
மார் 26, 2025 20:40

என்னங்க உதார் உடுறீங்க, எங்க தமிழக எம் பி க்கள் ஒவ்வொருத்தரா பேசிக்கிட்டே பேசிக்கிட்டே பேசிக்கிட்டே இருப்பதை எங்க டி வீ க்களில் காட்டுறாங்க, நீங்க பேச அனுமதிக்கலை என்று சொல்றீங்க. கொஞ்சம் அவிங்க கிட்ட ரெஸ்ட் எடுக்க சொல்லி நீங்க அந்த நேரத்தில் கொஞ்சம் கடன் வாங்கிக்குங்க


K.SANTHANAM
மார் 26, 2025 19:05

இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ள ராகுலை பாராளுமன்றத்தை விட்டு நீக்குங்கள்.


தாமரை மலர்கிறது
மார் 26, 2025 18:58

ராகுலுக்கு அரசியல் என்ன தெரியும்னு பேச ஆசைப்படுகிறார்? சும்மா தாய்லாந்து டூர் போயிட்டு வந்ததும், மூளை முளைச்சிட்டதா நினைப்பு?


surya krishna
மார் 26, 2025 18:28

ivar oru velinattukkaran,


அப்பாவி
மார் 26, 2025 17:19

சாரி ராவுல். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். கண்ணை தொடச்சிக்கோங்க.


Gokul Krishnan
மார் 26, 2025 17:00

எந்த திருட்டு கட்சியும் மக்கள் பிரச்சினை விலை வாசி உயர்வு அரசின் வரி கொள்ளை பற்றி விவாதிக்க போவது இல்லை


கண்ணா
மார் 26, 2025 16:57

ஆடிக்கு ஒரே தப, அமாவாசைக்கு ஒரு தப வர வேண்டியது, வந்து எல்லா நாடகமும் போட வேண்டியது.


Ray
மார் 27, 2025 00:27

மோடிதான் நூறு சதவீதம் தவறாம வரார். எதிர் கட்சிக்காரங்க குறிப்பா திமுக திரிணாமுல் காங்கிரஸ் காரங்க பேச எழுந்தாலே ரெண்டு சபாநாயகர்களும் மட்டுமல்ல பிரதமரும் மந்திரிகளுமே ஓடிப்போய் விடுகிறார்களே கண்டதில்லையா.


P. SRINIVASAN
மார் 26, 2025 15:23

இந்த பிஜேபி ஆட்சில் நியாயத்தை எதிர்பார்ப்பது ராகுலின் அறியாமை.


Anand
மார் 26, 2025 15:33

சில மதமாரி எச்சங்களுக்கு பிஜேபியை ஏளனம் செய்வதே முழுநேர வேலை.. ..


Suppan
மார் 26, 2025 16:06

கொள்ளுத்தாத்தா, பாட்டி, அம்மா ஆகியவர்கள் சபையை அலங்கரித்ததனால் தனக்கும் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார். பாவம். கேட்டதெல்லாம் உடனே கிடைக்காது சாரே


கண்ணன்
மார் 26, 2025 16:31

ஐயா இது வரை நடந்த காங் ஆட்சி பற்றித் தெரியுமா? நீங்கள் மிகவும் இளையவர என்று நினைக்கிறேன் தயவு செய்து வரலாற்றைப் படித்துவிட்டு எழுதவும்.


guna
மார் 26, 2025 16:38

அப்படியே பேசி வெட்டி முறிக்க போறாரு ...அதுக்கு பீலா சீன் விடுறே


Dr.C.S.Rangarajan
மார் 26, 2025 16:45

Though we do not know what we should know, we pretend as if we know not only the a,b,c, but also the x,y, z of everything from pin to plane.


Dharmavaan
மார் 26, 2025 16:50

தேசத்துரோகி தேசவிரோதி இந்திரா காங்கிரஸுக்கு வரம்பு தெரியவில்லை.


Ray
மார் 27, 2025 06:40

ஆனந்த் யாரு மதமாரி? சோனியாவா அல்லது ராகுலா? எந்த மதத்திலிருந்து எந்த மதத்ததுக்கு மாறினாங்க என்று தெளிவா சொல்லுங்க பார்க்கலாம். ஒரு அய்யங்கார் பொண்ணு தென்னாப்ரிக்கனை மணந்தாலும் அய்யங்கார்தானாம். அவர் பெற்ற பெண் அமெரிக்க ஜனாதிபதியானால் அவர் நம்மாள்னு கூத்தாடிக் கொண்டாடலாம். அதே ஒரு இத்தாலிக்காரி ஒரு இந்துவை மணந்தாலும் அவர் கிறிஸ்டியன்தானாம் - மதம் மாறியாம். என்னே ஒங்க சனாதன அ தர்மம்.


சமீபத்திய செய்தி