உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடிதம் எழுதுகிறேன், அழ வேண்டாம்; கதறிய சிறுவனை தேற்றிய மோடி; குஜராத் விழாவில் நெகிழ்ச்சி!

கடிதம் எழுதுகிறேன், அழ வேண்டாம்; கதறிய சிறுவனை தேற்றிய மோடி; குஜராத் விழாவில் நெகிழ்ச்சி!

ஆமதாபாத்: குஜராத் விழாவில் கதறி அழுத சிறுவனிடம், ''உன் முகவரிக்கு நானே கடிதம் எழுதுகிறேன், அழக்கூடாது,'' என்று ஆறுதல் கூறிய மோடி, ''சின்னஞ்சிறு குழந்தைகளின் அன்பை பெறுவதை காட்டிலும், இந்த வாழ்க்கையில் வேறு எதுவும் பெரிதில்லை,'' என்றார்.குஜராத் மாநிலத்திற்கு இன்று (செப் 20) பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாவ்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.34,200 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tcqhzw8g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0https://www.instagram.com/reel/DO0qGlaAWDF/பின்னர் அங்கு நடந்த விழா கூட்டத்தில் மேடையில் இருந்தபடி பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன், கையில் பிரதமர் மோடியின் உருவ ஓவியத்தை கையில் ஏந்தியிருந்தான். மோடியை பார்த்தபடி, ஓவியத்தை அசைத்துக் கொண்டிருந்தான்.இதை கவனித்த மோடி, 'சபாஷ் மகனே, நீ வைத்திருக்கும் ஓவியத்தை நான் பரிசாக பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறினார். 'அந்த சிறுவன் ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டு வந்திருக்கிறான். அவன் இவ்வளவு நேரமாக அங்கேயே நின்று கொண்டிருக்கிறான். அவன் கைகள் வலிக்கும். யாரேனும் அந்த ஓவியத்தை வாங்கி வாருங்கள்' என்று கூறினார். இதையடுத்து அங்கிருந்த காவலர் ஒருவர், சிறுவன் கையில் வைத்திருந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டார்ஆனால், காவலர் ஓவியத்தை வாங்கிக்கொண்டதும் சிறுவன் உடனே அழ ஆரம்பித்தான். அதைக்கண்ட மோடி, பேசுவதை நிறுத்தி விட்டு, சிறுவனுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தார்.''சபாஷ் மகனே. வா மகனே, உன் ஓவியம் எனக்குக் கிடைத்தது. அழ வேண்டிய அவசியமில்லை மகனே. உனது உணர்ச்சி எனக்கு புரிகிறது. புரிந்தது. உன் ஓவியம் கிடைத்து விட்டது. ஓவியத்தில் உன் முகவரி எழுதப்பட்டிருக்கும், நானே நிச்சயம் உனக்கு ஒரு கடிதம் எழுதுவேன். சின்னஞ்சிறு குழந்தைகளின் அன்புக்கு பாத்திரமாவதை காட்டிலும், இந்த வாழ்க்கையில் பெரியது எதுவுமில்லை,'' என்றார் மோடி.இதன் பிறகே சிறுவன் சமாதானம் ஆகி, அமைதியாக இருந்தான். அரசு விழாவில் கதறி அழுத சிறுவனுக்கு பிரதமர் மோடியே ஆறுதல் கூறி தேற்றிய வீடியோ, இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vasan
செப் 20, 2025 22:29

திரு. மோடி ஜி யின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தால் அந்த குழந்தை அவரை ஓவியமாய் வரைந்திருக்கும். அவர் பிறந்த நாள் பரிசளிக்க கொண்டு வந்திருக்கும். பின்னர் அந்த ஓவியத்தை தன்னிடம் இருந்து வாங்கி விட்டார்கள் என்றதும் அழுதிருக்கும். அப்பப்பா. அந்த நிலைமையை மேடையில் இருந்து கவனித்த மோடி ஜி யின் தொலை நோக்குப்பார்வை, கையாண்ட விதம். புல்லரிக்கிறது. இன்னுமோர் மகாத்மாவை காண்கிறோம். மனிதருள் மாணிக்கம். வாழ்க நீர் இன்னொரு நூறாண்டு.


Venugopal S
செப் 20, 2025 20:25

அவன் பாட்டுக்கு அந்தப் படத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான், அதை அவன் கையிலிருந்து பிடுங்கி அழ வைத்து விட்டு அப்புறம் சமாதானப் படுத்தினாராம், தேவையா இது?


V Venkatachalam
செப் 21, 2025 13:26

நம்ம டமில் நாட்டில் இருக்கிறோம்.‌ திராவிடியா மூடல் அரசு ஆட்சி. அது சாதாரண ஆட்சி இல்லை. பிடுங்கி திங்கும் ஆட்சி என்பது எல்லார் மனதிலும் ஊறி விட்டது. அதுனால யார் எதை வாங்கினாலும் பிடுங்கி கொண்டதாகவே தோணும். அதுவும் க.உ.பீஸ்க்கு கேக்கவே வாணாம். பையன் கிட்டேயிருந்து பிடுங்கிட்டாங்களாம். அதுனால அந்த பையன் அழுதானாம்.


Padmasridharan
செப் 20, 2025 20:13

இந்த சிறுவனின் பெற்றோர் எங்கே சாமி. .


Kumar Kumzi
செப் 20, 2025 19:06

இந்தியன் ரத்தத்துக்கு பிறந்த குழந்தைகள் எப்போதும் மோடி அவர்களை அன்போடு பார்ப்பார்கள் பாலைவன மதத்துக்கு பிறந்த குழந்தைகள் எப்போதும் மோடி ஜி மேல் வெறுப்பாக இருப்பானுங்க


s. mani
செப் 20, 2025 20:35

yes


dandanakka
செப் 21, 2025 08:37

எல்லாரையும் அப்படி சொல்ல முடியாது. But yes, 80% அப்படி தான். என்ன மதம் கண்ணை மறைகிறது. மிக நல்லவர்களும் இருகிறார்கள்.


KOVAIKARAN
செப் 20, 2025 18:18

இது போன்ற நிகழ்வுகள் தமிழக ஆட்சியாளர்களிடம் நடைபெறுமா? நடைபெறாது. ஏனெனில், அவர்கள் கூட்டத்திற்கு வருவது 200 ரூபாய்க்கும், சாராயத்திற்காகவும், வரும் கூட்டமே, அதில் கட்சிக்காரர்கள் கூட இருப்பார்கள்.


karan
செப் 20, 2025 18:05

nice script


Naga Subramanian
செப் 20, 2025 18:47

தங்களது தலைவர் கேமரா சகிதமாக சென்று சிலர் வீட்டில் காப்பி சாப்பிடுவது போல போட்டோ எடுத்துக் கொள்வாரே அதை போல நினைத்தீர்களோ... ஐயோ பாவம்


HoneyBee
செப் 20, 2025 20:03

அடிமையே. கொஞ்சம் யோசி


முக்கிய வீடியோ