நடப்பது தெரியவில்லை!
நிதிஷ் குமாரின் மனநிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. அவருக்கு மாநிலத்தில் நடப்பது பற்றி எதுவும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அவரை ஆதரிக்கும் பா.ஜ.,வும் குற்றவாளி தான். நிதிஷ் குமாரின் தற்போதைய மனநிலை குறித்து பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றாக தெரியும்.- பிரசாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ் மக்களுக்கு நம்பிக்கையில்லை!
தேர்தல் கமிஷன் அதன் பொறுப்புகளை நிறைவேற்றாமல் ஒரு செயல்படாத அமைப்பாக மாறியுள்ளது. இன்று உள்ள தேர்தல் கமிஷன் ஒரு தோல்வியடைந்த அமைப்பு. மக்களுக்கு தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த பிரச்னையில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.- கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சைஊழலில் நீதித்துறை!
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின்வீட்டில் பணம் கிடைத்தது, நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றி மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது. மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு பதிலாக, இப்போது நீதிபதிகளின் வீடுகளில் இருந்து பணம் கிடைக்கிறது.- சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி