உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி

சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ''நான் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்,'' என்று அமராவதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார். ஆந்திரா மாநிலம் அமராவதியில் நடந்த அரசு விழாவில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:அமராவதி என்பது, இந்திரலோகத்தின் தலைநகரத்துப் பெயர். அது, ஆந்திராவின் தலைநகராகவும் இருப்பது எத்தகைய பெருமைக்குரிய ஒற்றுமை!https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wb2twkfp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது, ஸ்வர்ணா ஆந்திரா (தங்க ஆந்திரா) உருவாகும் என்பதற்கான அறிகுறி. ஸ்வர்ணா ஆந்திரா, வளர்ந்த பாரதம் உருவாக்கும் நமது நோக்கத்தை வலுப்படுத்தும். நான் குஜராத் மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்போது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை கூர்ந்து கவனிப்பேன். அவரது திட்டங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இன்று அவற்றை அமல்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.இந்தியாவை விண்வெளித்துறையில் வல்லரசு நாடாக்கியதில் ஆந்திராவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏராளமான மாணவர்களை விண்வெளித்துறைக்கு இந்த மாநிலம் ஈர்க்கிறது.நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் புதிய நிறுவனம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய ஏவுகணை சோதனை தளத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நவதுர்கா சோதனை தளம், இந்தியாவின் பாதுகாப்பு சக்தியை வலுப்படுத்தும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.அமராவதி நகரத்தை மறு உருவாக்கம் செய்வதற்கான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
மே 03, 2025 08:51

நாயுடுகாரு ஆயிரம்.கோடிக்கு மேல சொத்து , கம்பெனி எல்லாம் வெச்சிருக்காரு. எப்பிடின்னு கேட்டு கத்துக்கலையா?


Raja k
மே 02, 2025 22:13

ஜிங்கு ஜா, ஜிங்கு ஜா,, ஜிங்கு ஜா,,,


K.n. Dhasarathan
மே 02, 2025 21:12

பிரதமர் அவர்களே அது அப்போ.இப்போ தமிழ் நாட்டை பார்த்து கற்று கொள்ளுங்கள், எவ்வளவு இம்சைகளுக்கு இடையிலும் ஆட்சியை எவ்வளவு சிறப்பாக கொண்டு செலுத்துகிறார், அடுத்து அகில உலக விஷயங்களிலும் ஆலோசனையும் பெறலாம் .


ஆரூர் ரங்
மே 03, 2025 02:08

சார் சார். இம்சை அரசனின் ஆட்சியையா நல்லாயிருக்குன்னு சொல்லுறிங்க? அடப் பாவமே.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 02, 2025 20:48

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்ல அம்மி குழவிகளை வாங்கிடணும்.


vivek
மே 02, 2025 21:33

உம்மை போல பெரிய பெயரும் வைக்கணும்......நல்ல அறிவாளி


தமிழ்வேள்
மே 02, 2025 19:59

வறட்டு கவுரவத்திற்கு பேசாமல் யதார்த்தமாக வெளிப்படையாக ஒப்புக் கொள்கி.றார் பாருங்கள் அதுதான் பாரத கலாச்சாரம் ஹிந்து தர்மத்தின் பிறவி குணம்.. திருட்டு திமுகவாக இருந்தால் எது எதற்கு என்று விவஸ்தை இன்றி நாடு முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு திரியும்...


Ramesh Sargam
மே 02, 2025 19:51

வேறு யாராவது இப்படி பேசுவார்களா. சந்திரபாபுவா, யார் அது என்று கேள்வி கேட்பார்கள். மோடி அப்படி அல்ல. மோடி எல்லோரையும் மதிக்கத்தெரிந்தவர்.


M.Sam
மே 02, 2025 19:19

இதுக்கு பேரு தான் ஒட்டுண்ணி தனம் .அவரை விட்டா உங்க ஆட்சி கவிழ்ந்து விடும் என்கிற பயம் நல்லா தெரிகின்றது


Srinivasan Krishnamoorthy
மே 02, 2025 20:15

foolish to believe that Modi government which has near majority is dependent on chandrababu naidutdp and nitish. It is otherway round, they need Modis government help to survive in their respective states..Please raise. It is no longer UPA government run by alliance..


vivek
மே 02, 2025 22:12

இப்படிக்கு டாஸ்மாக் ஒட்டுண்ணி


essemn
மே 02, 2025 19:08

ungaladhu பேச்சு உண்மையிலே எங்களை ஈர்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு தேசத்தின் பிதாமகனும். பிரதமரும் ஒரு மாநில முதல்வரை இதற்கும் மேல் எப்படி பாராட்ட முடியும். இந்த பெருந்தன்மை இன்றைய திராவிட அரசியல்வாதிகளுக்கு உண்டா? கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உண்டு.


KRISHNA
மே 02, 2025 19:01

ARUMAI


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை