உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்

இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், பா.ஜ., சிறந்த கட்டமைப்புடன் இருப்பதாக பாராட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவான சல்மான் குர்ஷித் எழுதிய 'போட்டியிடுவதில் ஜனநாயகப் பற்றாக்குறை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது, இண்டி கூட்டணி மற்றும் ஆளும் பா.ஜ., குறித்து அவர் கூறியது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.youtube.com/embed/aP2pLwAMajkஅவர் கூறியதாவது; மிருதுஞ்சய் சிங் யாதவ் கூறுவது போல் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இண்டி கூட்டணி இன்னும் ஒற்றுமையாக உள்ளது என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது எனக்கு உறுதியாக தெரியவில்லை. இண்டி கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் சல்மான் குர்ஷித் இருப்பதால், அவர் இதற்கு பதிலளிக்கலாம். இண்டி கூட்டணி இன்னமும் ஒற்றுமையாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால், அது பலவீனமாக இருப்பது தெரிகிறது. நமக்கு இன்னமும் காலம் இருக்கிறது. இண்டி கூட்டணியை மீண்டும் ஒருங்கிணைக்கலாம். அதேவேளையில், பா.ஜ., மிகவும் வலிமையாக உள்ளது. என்னுடைய அனுபவத்திலும் சரி, வரலாற்றை படித்து தெரிந்ததிலும் சரி, பா.ஜ., போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் நான் பார்த்ததில்லை. அனைத்துத் துறைகளிலும் வலிமையாக இருக்கிறார்கள். இது மற்றும் ஒரு சாதாரண கட்சியல்ல, இவ்வாறு கூறினார். ப.சிதம்பரம் பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.,வின் பிரதீப் பண்டாரி, ' காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது, ராகுலுக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களுக்கு கூட தெரிந்துள்ளது,' என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

S.jayaram
மே 22, 2025 15:29

உண்மைதான் பாஜக வலிமையாகத்தான் உள்ளது. காரணம் ஆட்சி, அதிகாரம், செயல்பாடுகள் போன்றவையே.


Thiyagarajan S
மே 21, 2025 21:41

RSS.... வழிகாட்டியது


R.Eswara Moorthy
மே 19, 2025 15:56

அவர் கூறுவது உண்மையே சரியா தவறா துணிந்து செய்கின்றனர் நியாயம் அநியாயம் அவர்களுக்கு கிடையாது ஆகவே கட்டமைப்பு வலுவாக உள்ளது


R SRINIVASAN
மே 19, 2025 08:33

இங்கே கருத்து கூறுபவர் ஒருவர் படித்தவர் வாக்களிப்பதில்லை என்று கூறியிருக்கிறார். இவரைப்போன்றவர்கள் முதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சொல்லட்டும். மேலும் வாக்காளர் பட்டியலை முறையாக வரிசைப்படி சரிபார்ப்பதகே நிறைய நேரம் எடுத்துக்கு கொள்கிறார்கள். இதை தவிர்க்க மருத்துவமனையில் உள்ளதைப்போல் ஆங்காங்கே டிவி பெட்டிகளை பொருத்தி வாக்காளர்களின் நம்பர்களை அதில் டிஸ்பிலே செய்யலாம் .


KARUNAKARAN
மே 17, 2025 16:28

இண்டி கூட்டணி சுயநல கூட்டணி .தேச துரோக கூட்டணி


baala
மே 17, 2025 09:24

படித்தவர்கள்,மெத்த படித்தவர்கள்,பெரும்பாலோனோர்,வாக்களிப்பதில்லை. இதை ஏன் சிந்திப்பதில்லை.


Venkatesan Srinivasan
மே 17, 2025 00:54

பொருத்தமாக சொல்வதென்றால் வாக்கு வங்கி அரசியல் மட்டுமே ஜனநாயகத்தை ஆட்சி செயல்பாடுகளில் நேர்மையை கொண்டுவந்து விடாது. உதாரணமாக நாடோடிகள், பிச்சைக்காரர்கள், போதை பழக்கத்தில் உள்ளவர்கள், முற்றிலும் படிப்பறிவு இல்லாதவர்கள், உடல் உழைப்பு இன்றி வறிய நிலையில் உள்ளவர்கள், குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு உள்ளவர்கள் ஆகியோர் வாக்காளர்களாக இருந்தால் அல்லது அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தால் அவர்களால் ஒரு நல்ல திறமையான நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்ய இயலாது. அங்கு ஜனநாயகத்தின் வீழ்ச்சி ஆரம்பித்து விடுகிறது. இந்தியா போன்ற பல்வேறு வகையான மதம் மொழி கலாச்சாரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் மேற்குறிப்பிட்ட வகை மக்களால் ஒரு சமன்பாடின்மை நிலை உருவாக வாய்ப்புகள் அதிகம். நம்மை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் அரசியல் தலைமை இத்தகைய சூழல்களை கணித்து பொதுமக்கள் வாக்கு அளித்து அரசாட்சி அமைவதை தவிர்த்து ஒரே கட்சி ஆட்சியாக நடத்தி வருகின்றனர்.


Natarajan Ramanathan
மே 16, 2025 21:56

பாஜக கட்டமைப்புக்கு காரணம் அதன் RSS பின்புலம்தான். மிக நேர்த்தியான தேசப்பற்றுள்ள ஒரு இயக்கம்தான் RSS.


sridhar
மே 16, 2025 19:40

Chidambaram and his son have fallen out of Sonia family’s favour. Both have been sidelined of late. We can see more such speeches and action from PC and his son.


Suresh Velan
மே 17, 2025 16:32

சிதம்பரம் பிஜேபிக்கு தூது விடுகிறார் , அடுத்து என்ன பதவி பிஜேபிக்கு வந்தால் கொடுப்பீர்கள் என்று பிஜேபி தலைவர்களிடம் பேசுவார் . ஆனால் , இந்த ஆளு , தேச பற்று இல்லாத ஒரு தேச துரோகி லெவெலில் இருக்க்கிறார் என்று சொல்கிறார்கள் , எனவே இவரை பிஜேபி கழித்து கட்டுவது நல்லது.


Rathna
மே 16, 2025 19:33

ஆபரேஷன் சிந்தூர்க்கு பின்னால் இன்னும் நிலைமை மிக மோசமாகி விட்டது. பலருக்கு பேதி போக ஆரம்பித்து விட்டது.


மீனவ நண்பன்
மே 17, 2025 08:12

அணையின் சுவற்றில் தண்ணீர் கசிவதை பார்த்த சிறுவன் விரலால் அந்த துவாரத்திலிருந்து தண்ணீர் வராமல் நிறுத்தி நின்றபடியே சோர்வடைந்து தூங்கி விட்டான் ..அந்த வழியே வந்த ஊர்பெரியவர்கள் சிறுவனின் செயலை பாராட்டி அழிவிலிருந்து அந்த கிராமத்தை சிறுவன் மீட்டதாக பெருமை கொண்டார்கள் ... நீங்களும் அந்த மாதிரி நல்ல காரியம் செய்யலாமே.


புதிய வீடியோ