மேலும் செய்திகள்
மண்டல பூஜை நாளில் தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
29 minutes ago
இலங்கை தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றத்தில் வரவேற்பு
3 hour(s) ago
மாண்டியா: ''எனக்கு யாரிடம் இருந்தும் மிரட்டல் வரவில்லை'' என, மேலுகோட்டே சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா விளக்கம் அளித்துள்ளார்.'ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் குபேந்திர ரெட்டி, தன்னை ஆதரிக்கும்படி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசுவதாகவும், ஓட்டுப் போட மறுத்ததால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என மிரட்டுவதாகவும், மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா கூறி இருந்தார். பெங்களூரு விதான் சவுதா போலீசிலும் புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மாண்டியாவில், மேலுகோட்டே சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா நேற்று அளித்த பேட்டி:எனக்கு யாரிடம் இருந்தும் மிரட்டல் வரவில்லை. யாரை பார்த்தும் பயப்படும் அவசியமும் எனக்கு இல்லை. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவோர், தங்களை ஆதரிக்கும்படி எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கலாம். அது தான் ஜனநாயகம். அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.எனக்கு எந்த சலுகையும் வேண்டாம். சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மீது இருக்கும் அக்கறையால், எம்.எல்.ஏ., ரவி கனிகா போலீசில் புகார் அளித்திருக்கலாம்.லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் முடிவு எடுக்கின்றனரோ அவர்களை ஆதரிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.போலீசில் தன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து, குபேந்திர ரெட்டி கூறுகையில், ''என்னை மிரட்டுவதற்காக, என் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். நான் பல தேர்தல்களில் தோற்றுள்ளேன். தேர்தலில் தோற்றாலும் எனக்கு அது பற்றி கவலை இல்லை.''எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு கேட்பது என் கடமை. அதை செய்து வருகிறேன். ராஜ்யசபா எம்.பி., ஆகும் வாய்ப்பு கிடைத்தால், மாநிலத்திற்காக குரல் கொடுப்பேன்,'' என்றார்.
29 minutes ago
3 hour(s) ago