உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்கவே முயற்சித்தேன்: பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி பேச்சு

அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்கவே முயற்சித்தேன்: பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வழக்கறிஞர் பணியில் துவங்கி நீதிபதி என 40 ஆண்டு கால நீதித்துறை பயணத்தில் அரசியலமைப்பை பின்பற்றியே நான் செயல்பட்டேன்,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், வரும் 23ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.இதனை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபசார விழாவில் கவாய் பேசியதாவது: 18 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 22 ஆண்டுகள் 6 நாட்கள் நீதிபதியாகவும் இருந்துள்ளேன். 40 ஆண்டுக்கும் மேலான இந்த பயணத்தில் நான் எப்போதும் அரசியலமைப்பை பின்பற்றியே செயல்பட்டேன். நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகள் எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமானவை.நான் அரசியலமைப்பின்தீவிர மாணவன்.1949 நவ.,25 அன்று அவர் ஆற்றிய உரையில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி ஒரு அடி முன்னேறி செல்லாவிட்டால் அல்லது சமூக பொருளாதார நீதியை அடைவதை நோக்கி முன்னேறாவிட்டால் ஜனநாயக கட்டடம் சீர்கெட்டு வீடு போல் இடிந்துவிடும் என அம்பேத்கர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.ஒரு நீதிபதியாக எனது பயணத்தில் அரசியலமைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட எனது உறுதிமொழிக்கு உண்மையாக இருக்க நான் எப்போதும் முயற்சித்தேன்.புல்டோசர் நீதிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதில் எனக்கு திருப்தி. ஒருவர் சட்டத்துடன் முரண்படுகிறார் என்பதற்காக அவர்களின் தங்குமிட உரிமையை பறிக்க முடியாது.ஓய்வுக்கு பிறகு எனது மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்காக உழைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்