| ADDED : ஜன 29, 2024 11:07 PM
பெங்களூரு: ''எனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற வருத்தம் இல்லை,'' என, பி.டி.ஏ.,வின் புதிய தலைவர் ஹாரிஸ் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:எனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் கிடைக்க வேண்டுமே. அமைச்சர் பதவி வழங்கவில்லை என, கூறியபடி அமர்ந்திருப்பதில் அர்த்தம் இல்லை. அரசியலில் பொறுமை, சகிப்புத்தன்மை வேண்டும்.அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என, எனக்கு வருத்தம் இல்லை. நானும் பொறுமையுடன் காத்திருப்பேன். சாந்திநகர் தொகுதியை முன்னேற்றவில்லை, பி.டி.ஏ.,வை எப்படி முன்னேற்றுவார் என, சிலர் என்னை பற்றி விமர்சிக்கின்றனர்.அரசியல் உரையாற்ற, நான் இங்கு வரவில்லை. வளர்ச்சி என்றால் என்ன, பி.டி.ஏ., என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பது தேவையற்றது.பெங்களூரு அழகான நகர். இதை தக்க வைத்துக்கொண்டு, வளர்க்க வேண்டும். மேலும் பல லே - அவுட்களை மேம்படுத்த திட்டம் வகுத்துள்ளோம். பெங்களூரின் வளர்ச்சிக்கு, அனைவருடனும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.பெங்களூரில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகி பணியாற்றினேன். நகரின் பிரச்னைகள் பற்றி, எனக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் விமர்சித்தபடி அமர்ந்திருந்தால், நஷ்டம் மக்களுக்குத்தான். பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆலோசனைகள் கூறட்டும்; அதை நான் ஏற்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.