உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹைதராபாத் வரேன்; முடிஞ்சா தடுக்கலாம் : ஓவைசிக்கு நவ்நீத் ராணா சவால்

ஹைதராபாத் வரேன்; முடிஞ்சா தடுக்கலாம் : ஓவைசிக்கு நவ்நீத் ராணா சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ''நான் ஹைதராபாதுக்கு வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்,'' என, அசாதுதீன் ஓவைசிக்கு, பா.ஜ., வேட்பாளர் நவ்நீத் ராணா சவால் விடுத்துள்ளார்.தமிழில், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நவ்நீத் ராணா, 38. இவர், 2019- லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், தெலுங்கானாவின் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் மாதவி லதாவை ஆதரித்து, சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, அத்தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.பி.,யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசியை கடுமையாக தாக்கிப் பேசினார்.பிரசாரத்தில் நவ்நீத் ராணா கூறுகையில், 'எங்களுக்கு வெறும் 15 வினாடிகள் போதும். போலீசாரை 15 வினாடிகளுக்கு அகற்றி வைத்தால், இருக்கும் இடம் தெரியாமல் உங்களை அழித்து விடுவோம்' என்றார். இவர், அசாதுதீன் ஓவைசி மற்றும் அவரது சகோதரரை குறிவைத்து பேசியதாகக் கூறப்படுகிறது. நவ்நீத் ராணாவின் இந்தப் பேச்சு, பிரசார களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு பதிலளித்த அசாதுதீன் ஓவைசி, ''என் சகோதரர் பீரங்கி போன்றவர். தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் அமைதியாக இருக்கிறார்,'' என்றார்.இந்நிலையில், சமூக வலைதளத்தில் நவ்நீத் ராணா நேற்று கூறியதாவது:அசாதுதீன் ஓவைசி தன் சகோதரரை பீரங்கி என, அழைத்துள்ளார். இது போன்ற பீரங்கிகளை நாங்கள் வீட்டிற்கு வெளியே அலங்காரத்திற்காக வைத்துள்ளோம். ராமர் பக்தர்களும், மோடியின் சிங்கங்களும் தற்போது இந்தியா முழுதும் ஒவ்வொரு தெருவிலும் சுற்றி வருகின்றனர். நான், ஹைதராபாத் வருகிறேன். யார் என்னை தடுக்கின்றனர் என்பதை பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், 'காங்கிரசுக்கு ஓட்டளித்தால் பாகிஸ்தானுக்கு ஓட்டளிப்பதற்கு சமம்' என, நவ்நீத் ராணா தெரிவித்தார். இது குறித்து அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
மே 12, 2024 13:04

அசாதுசின் ஓவைசி பேசிய போது .....வாயை பொத்தி கொண்டு இருந்தவர்கள் ....அதற்க்கு கண்டனம் தெரிவித்து நவ்நீத் ராணா அவர்கள் பேசிய போது.... கண்டனம் தெரிவித்துள்ளது ஏன் ???


பேசும் தமிழன்
மே 12, 2024 12:27

அவர் உண்மையை தானே கூறி இருக்கிறார்... கான் கிராஸ் கட்சிக்கு ஓட்டு போடுவதும்... பாகிஸ்தான் நாட்டுக்கு ஓட்டு போடுவதும் ஒன்று தான்...நாட்டு மக்கள் அனைவரும் அதை தான் கூறுகிறார்கள்.


J.V. Iyer
மே 12, 2024 04:11

காளியம்மன், மாரியம்மன், அம்மா பராசக்தி பல்வேறு வடிவங்களில் இதுபோன்ற இந்துமத விரோதிகளுக்கு எதிராக போராட வந்துவிட்டார்கள் இனி தடுப்பது கடினம்


Anantharaman Srinivasan
மே 11, 2024 23:12

ஓவர் வாய் சவடால் கூடாது


Syed ghouse basha
மே 11, 2024 22:51

ஏ அம்மா ஹைதராபாத் வர வேணாம் அம்மணி மணிப்பூருக்கு போங்க அங்கே உங்க வீரத்தை காட்டுங்க


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 12, 2024 08:19

ஏன் பாகிஸ்தான் தற்போது அடக்கப்பட்டு விட்டது சீனா தான் சிறிது துள்ளிக்கொண்டு உள்ளது அதனால் தான் மணிப்பூர் பக்கம் போகச் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன் இனி வரும் காலங்களில் பாகீஸ்தான் அடக்கப்பட்டது போல் சீனாவும் அடக்கப்படும்


ஆராவமுதன்,சின்னசேலம்
மே 12, 2024 12:21

அவரை மணிப்பூருக்கு போக சொல்ல நீ யாரு? நீ பாகிஸ்தானுக்கு போயிரு இந்துக்களின் நாட்டில் உனக்கென்ன வேலை?


subramanian
மே 12, 2024 13:22

இரு முதல்லே ஹைதராபாத்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை