உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டேன்; நிதின் கட்கரி

ஜாதி அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டேன்; நிதின் கட்கரி

நாக்பூர்: 'எனக்கு ஓட்டு போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி, ஜாதி அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.நாக்பூரில் உள்ள மத்திய இந்தியா கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட போது அவர் பேசியதாவது; ஜாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியலை கடுமையாக எதிர்க்கிறேன். ஒருவரின் தகுதியை அவரது திறமைகளை வைத்தே மதிப்பிட வேண்டும். ஜாதி, மதம், மொழி மற்றும் பாலினத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=biv6qhpz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒருமுறை 50 ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் பங்கேற்ற போது, 'ஜாதியை பற்றி யாராவது பேசினால், அவர்களை கடுமையாக உதைப்பேன்' என்று கூறினேன். நான் அரசியலில் இருக்கிறேன். எனக்கு ஓட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், நான் ஜாதி அரசியலை ஏற்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மார் 16, 2025 20:35

ஜாதி அரசியல்தான் திமுகவினருக்கு பிடிக்கும். மொழி அரசியல்தான் திமுகவினருக்கு பிடிக்கும். ஜாதி, மொழியை வைத்து அரசியல் செய்து, மக்களின் ஒற்றுமையை பிளந்து பிழைக்கத்தான் திமுகவினருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.


GMM
மார் 16, 2025 18:34

திறமை எல்லா சாதி, மத மக்களிடம் இருக்கும். வாக்கு வங்கி இட ஒதுக்கீடு சுவர் , நாட்டின் வளர்ச்சியை தடுத்து வருகிறது. கொலிஜியம், வாக்கு முறையால் எந்த சீர் திருத்தமும் உடன் செய்ய முடியாது. இந்தியாவில் தான் தேச விரோதிகள் அதிகம். நீங்கள் நெடுஞ்சாலை பற்றி முழு கவனம் செலுத்துங்கள். சுங்கம் கட்டணம் பராமரிக்க எப்போதும் தேவை. சாவடிகள் நீக்கம் கூடாது. 2 பங்கு மாநில சாலைகள் கட்டணம் இல்லாதவை. அதனை கட்டணம் செலுத்த விரும்பாத வாகனம் ஓட்டி உபயோகித்து கொள்ளலாம். முக்கிய இடங்களில் காலி நிலம் வாங்கி வாகனம் நிறுத்த இடம் தேவை. தற்காலிக ஓய்வு கூடம், ஓட்டல் நிறுவலாம். அந்நிய செலாவணியை ஈட்டும் நபர் வாகனங்களுக்கு மட்டும் மானிய விலையில் எரிபொருள். மற்றவர்களுக்கு உச்ச பட்ச விலை. கடத்தல் , உல்லாசம் போக்குவரத்து குறையும்.


अप्पावी
மார் 16, 2025 17:36

கட்கரி உங்க சாதிப் பேருதானே. நீங்கள்ளாம் ஜாதிய ஒழிக்கவே மாட்டீங்க. பிழைப்பே ஜாதிய வெச்சுதானே ஓடுது


ஆரூர் ரங்
மார் 16, 2025 20:11

அப்போ காந்தி, நேருவெல்லாம் ஊரு பேரு?. பகுத்தறிவு பேசும் கட்சிகளே சாதிப் பின்புலம் பார்த்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். சாதிக் கட்சிகளுடன் கூட்டணி. ஆக சாதி ஒழிப்பு பேச்சு போலித்தனம்.


Sampath Kumar
மார் 16, 2025 17:01

இதை பொய் உங்க பிஜேபி ஆளும்மாநிலத்தில் சொல்லி பாரு அடிவாங்காம வர்மட்ட


Rangarajan Cv
மார் 16, 2025 17:36

Nagpur is in Maharashtra. NG is fearless leader.


TRE
மார் 16, 2025 16:57

சாதி அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டேன் நிதின் கட்கரி - செய்தி ஆனால் மோடியின் மத அரசியல் ஏற்றுக்கொள்வேன்


venugopal s
மார் 16, 2025 15:58

ஆமாம் ஜாதி அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டேன் ஆனால் மத அரசியலை ஏற்றுக் கொள்கிறேன்,ஹி ஹி ஹி!


oviya vijay
மார் 16, 2025 19:12

ஹி ஹி இங்கே நாங்க திராவிடன் அப்படின்னு புருடா விடுவாய். பிளாஸ்டிக் சேர் குடுப்பான். அடுத்தவனை குறை செல்வான் இல்ல venugopal 200 ரூவா ஊ ஃபீஸ்


முக்கிய வீடியோ