உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன்: டில்லி முதல்வர் திட்டவட்டம்

கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன்: டில்லி முதல்வர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன் என டில்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி அளித்தார்.டில்லி சட்டசபையில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: தேர்தல் அறிக்கையின் மூலம் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசாங்கம் நிறைவேற்றும். கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன். சி. ஏ. ஜி., அறிக்கைகள் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கத்தை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடியவர்களையும் அம்பலப் படுத்தியுள்ளன.அவர்கள் டில்லியில் இருந்து வரி வசூலித்து, மற்ற மாநிலங்களில் தேர்தல்களுக்குப் பயன்படுத்தியவர்கள். நாங்கள் அனைத்தும் சி.ஏ.ஜி., அறிக்கைகளாக ஒவ்வொன்றாக வெளியிடுகிறோம், அதனால் அவர்கள் (ஆம் ஆத்மி தலைவர்கள்) பதறிப் போகிறார்கள். எந்த அரசாங்கமும் செய்ய முடியாத அளவுக்கு அம்பேத்கருக்கு உரிய மரியாதை கிடைப்பதை நரேந்திர மோடி அரசு உறுதி செய்துள்ளது. நான் முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அதிஷி என் அலுவலகத்திற்கு வந்து, எப்போது பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று கேட்டார். இது எனது வேலை, நான் நிச்சயமாக அதை முடிப்பேன் என்று அவரிடம் சொன்னேன். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சம்பத் ராஜ்
மார் 01, 2025 07:54

இதுக்கு முன்னாடி கேட்ட டயலாக் மாதிரி இருக்கே. டில்லி சௌக்கிதாரிணி.


Easwar Kamal
மார் 01, 2025 00:57

எடுத்துதான் பாரேன். அப்புறம் நீ இருக்கிற இடமே வேரே . குஜராத்துலயே இருந்து இவ்வளவுதான் உனக்கு பட்ஜெட் இப்போ இறுக்கமே கையிலே . அதுக்கு மேலே ஒரு பைசா செலவு பண்ணின என்ன ஆகும். இதுக்கு மரியாதையா mla இருந்துட்டு போயிரலாம்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 20:56

நீங்க நல்லா பண்ணுவீங்க ன்னு நம்பிக்கை இருக்குங்க குப்தா ஜி .... ஆனா முதல்முறை ஆட்சியிலேயே கெஜ்ரிவால் மீது அதிருப்தி எழுந்த நிலையிலும் இரண்டாம் முறை தேர்ந்தெடுத்தாங்க மக்கள் .... அப்படியொரு நம்பிக்கையை உங்க ஆட்சி பெறணும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை