உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்

விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்ட சம்பவம், பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச்சாலையில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறுக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளமாக கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M.Sam
மே 02, 2025 19:29

சும்மா பிலிம் காட்டாதீங்க...அதுசரி பிலிம் காட்டுவதில் உங்கள் மிஞ்ச முடியுமா?


GoK
மே 02, 2025 18:39

ஏன் இந்த தகவல்களை வெளியிட அவசியம்?


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
மே 02, 2025 17:47

முதலில் பாரத நாட்டிற்குள் இருக்கும் தேச துரோகிகளை அடையாளம் கண்டு, பக்கிரிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


சோழநாடன்
மே 02, 2025 16:39

தீவிரவாதிகளை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருகின்றது பாக்கிஸ்தான் என்று அந்த நாட்டையே போரின் மூலம் அழிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. போர் ஏற்பட்டால் இரண்டு நாடுகளும் அழிவைச் சந்திக்கும். இந்தியா வெற்றி பெற்றாலும், வெற்றிக்குக் கொடுக்கும் விலை அதிகமாகவே இருக்கும். போர் வேண்டாம். பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதிகளைக் கண்டு தண்டனைக் கொடுக்கவேண்டும்.


Paramasivam
மே 02, 2025 18:33

பாகிஸ்தானே தீவிரவாதி நாடுதான். அது மட்டுமல்ல, இங்கும் நிறைய தீவிரவாதிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒழித்தால் தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்


Ramesh Sargam
மே 02, 2025 18:51

ஒரு சில தியாகங்கள் இல்லாமல் வெற்றி இல்லை நண்பரே.


Guna Gkrv
மே 02, 2025 14:34

இந்நேரம் காஷ்மீர் அக்கிரப்பு பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்திருக்க வேண்டும் பொறுமை போதும் அடித்து நொறுக்குங்கள் பாகிஸ்தானை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை