உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.டி.பி.ஐ., வங்கியில் வேலை: 56 பேருக்கு அருமையான வாய்ப்பு

ஐ.டி.பி.ஐ., வங்கியில் வேலை: 56 பேருக்கு அருமையான வாய்ப்பு

புதுடில்லி: ஐ.டி.பி.ஐ., வங்கியில் மேலாளர், ஏ.ஜி.எம்., பதவிகளுக்கு 56 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15.ஐ.டி.பி.ஐ., வங்கியில் மேலாளர், ஏ.ஜி.எம்., பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.உதவி பொது மேலாளர் (ஏஜிஎம்)- 25மேலாளர்- 31

கல்வி தகுதி என்ன?

* உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். JAIIB/ CAIIB/ MBA போன்ற கூடுதல் தகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.* மேலாளர் பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு

* உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.* மேலாளர் பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.idbibank.in/index.aspx என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.

விண்ணப்ப கட்டணம்

* பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1000. எஸ். சி, எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200.

விண்ணப்பிக்க கடைசி தேதி

இன்று (செப்., 1) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
செப் 01, 2024 10:50

எட்டாப்பு fail , எனக்கு பொது மேலாளர் வேலை கிடைக்குமா .


P. VENKATESH RAJA
செப் 01, 2024 08:16

நல்ல வேலை.. அருமையான வாய்ப்பு


புதிய வீடியோ