உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா பொருளாதாரத்தில் பெரும் நாடாகும்: நிர்மலா சீதாராமன்

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா பொருளாதாரத்தில் பெரும் நாடாகும்: நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: மோடி 3வது முறையாக பிரதமர் ஆகும் போது, இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தமிழில் பேசுகையில் குறிப்பிட்டார்.புதுடில்லியில் நடக்கும் பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=61birniv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பிரதமர் கோரிக்கை

அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி ஒரு கோரிக்கை விடுத்தார். ''நிர்மலா ஜி, நீங்க ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசி முடித்துவிட்டீர்கள். அதேபோல் தமிழிலும், தெலுங்கிலும் பேசுங்கள்'' என பிரதமர் மோடி கூறினார்.

அயராத முயற்சி

இதையடுத்து, தமிழில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நமது பிரதமர் மோடிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய சபையில் தமிழில் பேச சொன்னதற்கு நன்றி. கீழ்மட்டத்தில் இருந்த நம் நாட்டை 5வது இடத்திற்கு பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். மோடி 3வது முறையாக பிரதமர் ஆகும் போது, இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இதற்கு காரணம் அயராத முயற்சி. நொறுங்கிப் போகும் நிலையில் இருந்த நாட்டை தற்போது 5வது இடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

முதலீடு

நம் நாட்டில் உள்ள வங்கிகளை ஆதாய நிலைக்கு கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி. உலக அளவில் வேற நாட்டில் இருக்கக் கூடிய வங்கிகள், தங்கள் பணத்தை எந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு வருகிறது. நமது பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால், முதலீடு செய்கிறோம் என முன் வருகின்றனர். அதனால் நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல விதமான, திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கு இந்த மாதிரியான பல்வேறு முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.

மீண்டும் ஆட்சி

பிரதமர் மோடியின் ஒரு வாக்கியம் இருக்கு. 'எல்லாருடனும் கூட சேர்ந்து இருப்போம். எல்லாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்போம். எல்லாரையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல, அனைவரின் உழைப்பும், நம்பிக்கையும் சேர்ந்து இருக்கும். அப்போது தான் நம் நாடு 2047ம் ஆண்டு முன்னேற்ற அடைந்த நாடாக மாறும்'' என சொன்னார். அதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து உழைக்கிறோம். நான் ஆங்கிலத்தில் சொன்னதும் புரிந்து இருக்கும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று, நம்ம கட்சி வெற்றி பெற்று எல்லாரும் முயற்சி செய்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். உங்களுடைய ஆதரவு தேவை. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து தெலுங்கில் சில நிமிடங்கள் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.தமிழிலும், தெலுங்கிலும் நிர்மலா சீதாராமன் பேசும் போது, பாரத் மண்டபத்தில் கை தட்டும் சத்தம் ஒலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

K.n. Dhasarathan
பிப் 19, 2024 13:21

ஏன் ? முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு நான்கு மொழி தெரியுமே இதில் என்ன இருக்கு ? மக்களை புரிந்து கொள்ளவில்லையே எங்கே பேரிடர் நிர்மலா அம்மையார் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட சொல்லுங்கள் பார்க்கலாம் டெபாசிட் மட்டுமல்ல, அட்ரஸ் ம் இல்லாமல் போகும்


Gopalan
பிப் 19, 2024 09:00

தமிழில் பேசுவதன் மூலம் பல திராவிடர்கள் பேச்சை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. தெலுங்கால் தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலான தெலுங்கு மக்கள் புரிந்து கொள்ள முடியும்.


Ramesh Sargam
பிப் 19, 2024 00:30

அதே நேரத்தில் நாட்டில் உள்ள தேச துரோக கட்சிகளின் பொருள் ஆதாரம் மிக மிக மோசமாக இருக்கும்.


g.s,rajan
பிப் 18, 2024 21:48

உஸ்.... அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே....


g.s,rajan
பிப் 18, 2024 21:40

காதுல பூ .....


g.s,rajan
பிப் 18, 2024 21:37

பாட்டி, காக்கா. வடை, நிச்சயம் புரியும் .....


g.s,rajan
பிப் 18, 2024 21:35

இந்தியர்களின் பொருளாதாரம் ....???


g.s,rajan
பிப் 18, 2024 21:33

பத்து வருடமா நம் நாட்டு மக்களிடம் காணாமல் போன பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வர முடியவில்லை,இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அடி போடறாங்க பேச்சுத்தான் வக்கணையா இருக்கு ....????


sahayadhas
பிப் 18, 2024 19:44

பொருளாதாரம், பொருளாதார முனு சொல்ராங்களே அது என்னது 1usd 58 ரூto 88 ரூ உயரமாக செல்வதா? அல்லது கிறிஸ்தவ, முஸ்லீம் நாட்டிலிருந்து பொருளை வாங்குவதா ?


g.s,rajan
பிப் 18, 2024 17:44

இந்தப் பத்து ஆண்டுகளில் சாதாரண மக்களுக்கு நீங்க ஒண்ணுமே நல்லது பண்ணல ,மொத்தத்துல பெருசா ??ஒண்ணுமே இல்லை ,இன்னும் ஐந்து ஆண்டுகளில் நீங்க நிச்சயம் மக்களுக்கு நன்மை ஒன்றும் செய்யப் போவதில்லை .....


Bellie Nanja Gowder
பிப் 18, 2024 19:50

அப்பா ராஜா நீ நம் நாட்டில் தான் இருக்கிறாயா???


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி