உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிவீர்கள்: பவன் கல்யாண்

சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிவீர்கள்: பவன் கல்யாண்

திருப்பதி: ''சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவர்,'' என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினார். திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் நேற்று, ஜனசேனா தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:லட்டு கலப்படம் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை குற்றம் சாட்டுகிறேன். லட்டு கலப்படம் என்பது ஒரு பெரிய பனிப்பாறையின் சிறிய முனை. முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.'சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை ஒழிக்க வேண்டும்' என, தமிழகத்தின் இளம் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. அதை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய் விட்டனர். ஆனால், சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, 'மலேரியா, டெங்கு போல, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என்றார். இதற்கு பா.ஜ.,வினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
அக் 04, 2024 12:51

எங்க பவன் அந்த உதய நிதி அழிந்தான். மாறாக அவனுக்கு பதவி உயர்வு துணை முதல்வர் என்று.


Mettai* Tamil
அக் 04, 2024 09:55

வாழ்த்துக்கள் ....பவன் ஜி


Barakat Ali
அக் 04, 2024 07:43

உய்ய்ய்ய்ய் யப்பா ..... இவரு போற போக்கைப் பார்த்தா பிஜேபிக்கு கூட ஹிந்துத்வா வாக்குகள் கிடைக்காது போலிருக்கே ???? ஹிந்துத்வாவை யாரு காப்பாத்துறாங்க ன்னு இனி சர்ச்சை எழும் .....


Velu Karuppiah
அக் 04, 2024 07:19

சனாதனம் என்பது இந்து தர்மத்தின் வாழ்வு முறை என்று கூறுகிறார்கள் இந்த வாழ்வு முறையை பட்டியல் போட்டு அந்த பட்டியலில் ஒன்றையாவது இந்த பவன் நடைமுறை படுத்தி வாழ்கிறாரா என்று கேளுங்கள் ்அப்படி இவர் வாழ்ந்தால் நிச்சயம் இவரை ஆதரிப்போம்


Mettai* Tamil
அக் 04, 2024 10:13

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வாழ்கை முறை தான் தமிழ் பண்பாட்டின் முக்கியமான அம்சம் என்பதை தனி மனித வாழ்க்கையில் பின்பற்றாமல் , தமிழ் காப்போம் , தமிழ் பண்பாட்டை காப்போம் என்று சொன்னதை ஏற்க வில்லையா ? இந்துக்கள் மட்டும் தான் தமிழ் பெயரை வைப்பது , தமிழ் பண்பாட்டை காப்பது என்று உள்ளார்கள் .....ஆனால் தமிழ் நாட்டில் பிற மதத்தவர்கள் சும்மா தமிழன் என்று சொல்லிக்கொண்டு ,அவரவர் மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க .......


Tamil Inban
அக் 04, 2024 05:57

இவனுக்கு


Priyan Vadanad
அக் 04, 2024 03:08

சனாதனம் அழியாது. அது நாளுக்கு நாள் மறு, புது உரு எடுக்கும். உலகெங்கும் பரவி நிற்கும்.


KR india
அக் 04, 2024 02:01

பவன் கல்யாண் போன்று உண்மையான ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் தான், நம் நாட்டிற்கு இன்றைய தேவை அவருக்கு பாராட்டுக்கள் பவனின் நல்ல செயல்பாடுகளுக்கு, பரிசாக, ஜன சேனா கட்சியை, ஆந்திரா மாநில பாரதீய ஜனதா கட்சியுடன் இணைத்து, ஒட்டு மொத்த ஆந்திராவுக்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண்-ஐ மாநில தலைவராக்க வேண்டும். மேலும், அவரின் கட்சியினருக்கும், உரிய மரியாதை கொடுத்து, அவரவர் தகுதிக்கேற்ப, பாரதீய ஜனதாவில், கௌரவமிக்க "அரசு" பதவிகளை தர வேண்டும். தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் போன்று ஆன்மீக நம்பிக்கையுடைய நடிகர்கள், தமிழகத்திலும் உண்டு. ஆனால், ஹிந்துமத "இறை நம்பிக்கையுடைய" தமிழ் நடிகர்கள் பலரும், பவன் கல்யாண் போன்று "தில்லாக" உண்மையை உரக்க சொல்ல தயங்குகின்றனர். தமிழகத்தில் உள்ள மக்கள் செல்வாக்குள்ள தமிழ் நடிகர்கள், இந்து தர்மத்திற்கு ஆபத்து வரும் போது வாய் மூடி, மௌனியாக இல்லாமல், பவன் போன்று இந்து மத தர்மத்திற்கு சனாதனம் ஆதரவாக குரல் கொடுக்க முன் வர வேண்டும் பகைவர்களிடமிருந்து, இந்து மத தர்மம் சனாதனம் காக்க உறுதி ஏற்போம்


RAJ
அக் 04, 2024 01:12

பவன் சார்... சூப்பர்.. கலக்குங்க..


சமீபத்திய செய்தி