உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத சூதாட்டம்; கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ. 12 கோடி பறிமுதல்

சட்டவிரோத சூதாட்டம்; கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ. 12 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: சட்டவிரோத சூதாட்டத்தில் வருவாய் ஈட்டியதாக கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சித்ரதுர்கா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பி, கோவா உட்பட பல்வேறு இடங்களில் காசினோ, கிளப்கள் நடத்தி வருகிறார். இவர் 'கிங் 567, பப்பீஸ் 003, ரத்னா கேமிங்' என்ற பெயர்களில், விதிமீறலாக 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தி, சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eslm8wgr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரது சகோதரர் திப்பேசாமி, துபாயில் 'டைமண்ட் சாப்டெக், டி.ஆர்.எஸ்., டெக்னாலஜிஸ், பிரைம் 9 டெக்னாலஜிஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களை நடத்துகிறார். இந்நிறுவனங்களில் வீரேந்தி பப்பி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது.இதையடுத்து, வீரேந்திர பப்பி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, வெளிநாட்டு கரன்சி ரூ.1 கோடி உள்பட ரூ.12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.6 கோடி தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் 4 சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, வீரேந்திர பப்பி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கோங்டாக்கில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சட்டவிரோத சூதாட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R K Raman
ஆக 24, 2025 13:31

கவலையை விடுங்கள். உ நீ ம உதவும்


Tamilan
ஆக 23, 2025 23:02

பாஜ காரர்கள் யாரும் சூதாட்டம் ஆடுவதில்லையோ


naranam
ஆக 23, 2025 19:18

காங்கிரஸ் காரர்களின் நய வஞ்சகத் திருட்டு தொடர்கிறது..


உண்மை கசக்கும்
ஆக 23, 2025 19:14

திருட்டு சாம்ராஜ்யம்


SVR
ஆக 23, 2025 19:08

இது தான் உண்மையான திருட்டு. ஓட்ட மோதி திருடினார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய். நடக்கட்டும் அமலாக்கத்துறையின் பணி.


ராமகிருஷ்ணன்
ஆக 23, 2025 18:32

காங்கிரஸ், திமுக மற்றும் இண்டி கூட்டணியினர் தான் எல்லா விதமான சட்ட விரோத தேச விரோத தொழில்கள் செய்கிறார்கள், இவ்வகையில் அவர்களுக்குள் ஒற்றுமை, கூட்டுறவு இருக்கிறது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 23, 2025 18:16

"வெளிநாட்டு கரன்சி ரூ.1 கோடி உள்பட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது." இந்த எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர் என்ற கட்சி பதவிகளில் இருப்பவர்களிடம் எப்படி இப்படி 10 கோடி, 50 கோடி, 500 கோடி என்று பணம் சேர்கிறது? பதில் சொல்லுங்கள் சற்றேனும் தேசப்பற்றுள்ள சகோதரர்களே.


வாய்மையே வெல்லும்
ஆக 23, 2025 17:38

விஜய் அண்ணா கட்சியில் லாட்டரி மார்ட்டின் குடும்பம் இருக்கே.. இனிமே புது கெட்டப்பு டொப்பி வாங்கக்கூட முடியாதா கோபால்... அய்யகோ


suresh guptha
ஆக 23, 2025 17:34

ONCE THE 30 DAYS JAIL LAW PASSED,I THINK THEREWILL BE A LOT OF MID TERM POLL WILL BE THERE


Vasan
ஆக 23, 2025 17:29

Put him in jaildue to online gaming with money, and on 31st day disqualify himthose in jail for more than 30 days should be stripped of their post. By this method, all the corrupt politicians, majority of them non-BJP, can be disqualified.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை