| ADDED : மே 21, 2025 10:58 AM
பெங்களூரு; கர்நாடகாவுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 7 மாவட்டங்களில் மிக அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளது.கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெங்களூரு நகரமே மழையால் வெள்ளக்காடானது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, சுரங்கப்பாதைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xzrfhjr1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட் என்ற மிக அதிக அளவிலான மழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் படி, 204 மி.மீ., அல்லது அதற்கு அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு; தக்ஷன கர்நாடகாஉடுப்பி உத்தர கன்னடாஷிவ்மோகா சிக்கமகளூரு ஹாசன் குடகுஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்; பெலகாவி தார்வாட் கடாக்ஹாவேரி தாவணகெரே மைசூரு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் மற்றும் புறநகர், கொப்பல், பாஹல்கோட் ஆகிய இடங்கள் ஆரஞ்சு அலர்ட்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.