உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் பா.ஜ., தெலுங்குதேசம் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது

ஆந்திராவில் பா.ஜ., தெலுங்குதேசம் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது

புதுடில்லி: ஆந்திராவில், பா.ஜ., தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டதை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உறுதி செய்துள்ளார்.ஆந்திராவில் லோக்சபா தேர்தலோடு சேர்த்து அம்மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக, அவர், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். பாஜ.,வையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பா.ஜ., தலைவர் நட்டாவையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அப்போது இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதியானது.இந்நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளை பகிர்ந்து கொள்வது குறித்து பாஜ., தெலுங்குதேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. இதனை, சந்திரபாபு நாயுடுவும் உறுதி செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ., தெலுங்குதேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளது. வரும் தேர்தலில் இக்கூட்டணி அமோக வெற்றி பெறும். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. விரைவில் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும்‛‛, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
மார் 10, 2024 04:47

தென்னிந்தியாவில் பிஜேபி நூறு இடங்களுக்கு மேல் பெறும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 09, 2024 22:21

அப்போ பிஜேபி பத்தி பாபு பேசியதையும், அவரைப் பத்தி பிஜேபி பேசியதையும் மறந்துருவோம் ......


sankaranarayanan
மார் 09, 2024 21:24

அப்போ சந்திரனின் ஆட்சி மீதும் ஆந்திராவில் துவக்கம் இனி ஒருபோது ஆந்திராவிற்காக சிறப்பு தொகை கேட்க வேண்டாம் நாட்டோடு ஒத்து வாழவேண்டும் கோபாலபுரம் போகவேண்டாம் அங்கே சென்று கோவிந்தா போட வேண்டாம்


Krishnamurthy Venkatesan
மார் 09, 2024 20:01

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தனி தனியாக போட்டி போடும் காலம் எப்போது வரும்?


பேசும் தமிழன்
மார் 09, 2024 19:55

நல்லது .....நாட்டை காக்க ....ஊழல் பேர்வழிகளை விரட்டி அடிக்க ...சிறு துரும்பும் பல் குத்த உதவும் !!!


abdulrahim
மார் 10, 2024 15:49

இந்த சிறு துரும்பு சில நாட்களுக்கு முன்னாள் சிறையில் இருந்ததே எதுக்காக? ஊழலுக்காகத்தானே ???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை