உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் 3 நாளில் 10 யானைகள் உயிரிழப்பு!

ம.பி.,யில் 3 நாளில் 10 யானைகள் உயிரிழப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில், 3 நாட்களில் மட்டும் 10 யானைகள் உயிரிழந்துள்ளன.இச்சம்பவம் மாநிலத்தின் பந்தவர்கார் புலிகள் வனப்பகுதிக்கு வெளியே நடந்திருக்கிறது. வனத்துறை அதிகாரி கூறுகையில்,இந்த வாரத்தின் 3 நாட்களில் மட்டும் 10 யானைகள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றன.கடந்த செவ்வாய் அன்று, சங்கானியில் 4 யானைகளும், பகேலியில் உள்ள ஹிதோலி புலிகள் வனப்பகுதியில் புதன் கிழமை அன்று 4 யானைகள் இறந்து கிடந்தன. அதேபோல, வியாழன் அன்று 2 யானைகள் இறந்து கிடந்தன.ஒரு கூட்டத்தில் மொத்தம் இருந்த 13 யானைகளில் 3 யானைகள் மட்டுமே தற்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த 3 யானைகளும் கட்னி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு நகர்ந்து வருகின்றன.முழு விசாரணைக்கு பிறகே விபரம் தெரியவரும்.யானைகள் உட்கொண்ட தாவரங்கள், இரைப்பையில் இருந்தவை ஆய்வுக்கு சேகரிக்கப்பட்டுள்ளன. வழக்கத்திற்கு மாறாக, இம்மாதிரி சம்பவங்கள் நடந்துவருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி