உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமான வரி ரீபண்ட் வருகிறது புதிய விதிமுறை

வருமான வரி ரீபண்ட் வருகிறது புதிய விதிமுறை

புதுடில்லி :தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள், சுலபமாக 'ரீபண்ட்' பெற புதிய விதிமுறையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளதுவருமான வரி கணக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறியவர்கள், தாமதத்திற்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.விபத்து, வெள்ளம், இயற்கை பேரழிவு உட்பட உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை ஏற்கப்படும். இவர்கள், அதிகமாக கட்டிய வரித்தொகையை திரும்ப பெறுவதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும். இதற்கு தீர்வு காண எளிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் பரிசீலிக்கும் 'ரீபண்ட்' தொகைக்கான வரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடிரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, 3 கோடி ரூபாய்க்கு அதிகமான 'ரீபண்ட்' தொகை பற்றி வருமான வரி வாரியம் பரிசீலித்தது. தற்போது அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி, வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் 'ரீபண்ட்' விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி முதன்மை ஆணையர்கள்/வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்படுகிறது ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் 3 கோடி ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால், விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி தலைமை ஆணையர்களுக்கு உண்டு  மூன்று கோடி ரூபாய்க்கு அதிகமான 'ரீபண்ட்' தொகை மீது முடிவு எடுக்கும் அதிகாரம் முதன்மை தலைமை வருமான வரி ஆணையருக்கு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gopinath Rajendran
அக் 09, 2024 06:25

வழக்கமா oru maathathil varum returns intha varudam 4 maathangal mudinthum processing status thaan irukku. naan cleartax moolamaaga பைலை பண்ணினேன், e-verify panniyaachi but still processing state தான் IT சைட் ல kaatuthu


Santhi.k Santhi.k
அக் 05, 2024 16:16

வணக்கம் நான் பட்டதாரி ஆசிரியை.௨௦௨௪ ஜூலை 31 க்குள் ITR தாக்கல் செய்து விட்டேன். அக்டோபர் டிமாண்ட்Rs 6250 நோட்டீஸ் வந்துள்ளது. அவசியம் கட்டவேண்டுமா


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2024 10:48

முதலில் நீங்கள் தாக்கல் செய்த ITR ஐ சரிபாருங்கள் ..... தேவைப்பட்டால் ஒரு சார்ட்டட் அக்கவுன்டென்ட் உதவி கொண்டு சரிபாருங்கள் .... உங்களது கணக்கீடு சரியென்றால் நீங்கள் விளக்கமளிக்கலாம் ..... உங்களது கணக்கீடு தவறென்றால் அவர்கள் கேட்கும் டிமாண்ட் சரியென்றால் நீங்கள் உடனடியாக அதை ஆன்லைன் மூலமாகக் கட்டிவிடுவதே நல்லது ..... வருமான வரி விவகாரங்களில் தாமதமோ, அலட்சியமோ கூடாது .....


M Selvaraaj Prabu
அக் 05, 2024 12:48

நான் கடந்த இரண்டு வருடங்களாக நானே எனக்கும், என் மனைவிக்கும் வருமான வரி தளத்தில் ITR தாக்கல் செய்கிறேன். ரீபண்ட் 15 அல்லது 20 நாளில் வந்து விடுகிறது. நாம் கொடுக்கும் விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. என் உதவி தேவை படுபவர்கள் என்னை 77364 34918 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Varadarajan Nagarajan
அக் 05, 2024 08:07

புதிய நடைமுறை கால தாமதத்தை குறைக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கலாம் ஆனால் ஊழலுக்கு வழி வகுக்கும். வருமான வரி பிடித்தம் செய்பவர்கள் கொடுக்கவேண்டிய படிவத்தை Form 16A அளிப்பதற்கு ஜூன் மாதம்வரை மூன்றுமாத கால அவகாசம் உள்ளது. அதை பெற்றபின் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய தற்பொழுதுள்ள கால அவகாசம் மிக குறைவு. அதை முதலில் சரிசெய்யவேண்டும். அதுபோல் தற்பொழுது ரீபண்ட் பெறுவதற்கு படும் அவஸ்தைகளை களைய நடவடிக்கை தேவை.


KRISHNAN R
அக் 05, 2024 07:38

2013-14 ஆண்டு refund 8000/ .. இன்னும் வரவே இல்லை. 7-1/2...போட்டு கொண்டு இருக்கிறார்கள்.. மாநில மத்திய..எல்லாம்... ஒன்று தான்


அப்பாவி
அக் 05, 2024 03:35

ஒரு கேவலமான நடைமுறை இருக்கிறது. வருமான வர் கேட்டு நோட்டீஸ் அனுப்புபவர் உள்ளூர் அதிகாரியாம். இன்கம் டாக்ஸ் விதி itr/1968/237/96543/345/890 n படி உங்கள் மேலே நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு ஒரு ரிஜிஸ்டர் தபால் வருது. ஆனா அதுக்கு பதில் நான் IT இணையதளத்துக்கு போய் என் கேசை கண்டு புடிச்சு அதில் விளக்கம் தரணுமாம். அப்போ இந்த ஆப்பீசர் எதுக்கு? இதனால் யாருக்கு லாபம்? பெங்களூரில் இருக்கும் reddyauditor நு தனியா தொழில் செய்யும் நபர்கள் பணம் பறிக்கும் சிலருக்கு லாபம். அதிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் வரும் இமெயில்களின் காப்பி அவனுக்கு ஏன் காப்பி போகுதுன்னு தெரியலை. அதிகாரிகளும், ஆடிட்டர்களும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு. எப்பிடி பணம் பிடுங்கலாம்னு பாக்குறாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 05, 2024 11:05

மருத்துவர்கள், தொழிலதிபர்கள் வரி ஏய்ப்புச் செய்வதை முற்றிலும் தடுக்க முடியவில்லை என்பது உண்மையே ..... இருப்பினும் வரி ஏய்ப்பைத் தடுக்க, வரி விதிப்பு, கணக்கு தாக்கல் ஆகியவற்றை எளிமைப்படுத்த நிதியமைச்சகத்தின் கீழ் வரும் வருமான வரித்துறை பல மாற்றங்களைச் செய்துள்ளது ...... மேலும் பல இம்ப்ரூவ்மென்ட்ஸ் வரும் ..... வவ துறையின் செயல்பாடுகளை பற்றிய புரிதலில்லாமல், குறை சொல்லவேண்டும் என்பதற்காக கருத்துப் போடக்கூடாது .....


அப்பாவி
அக் 05, 2024 03:27

ரீஃபண்ட் தொகையை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி இல்லை 500 கோடிக்கு ஒசத்தினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. சாதாரண குடிமகன் சில ஆயிரம் ரூபாய் ரீஃபண்ட் வாங்குவதிற்குள் கஜ கர்ணம் போட வெக்கறாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 05, 2024 11:09

வவ கணக்கைச் சரியாக தாக்கல் செய்தால் எந்த பிரச்னையும் இல்லாமல் ரீஃபண்ட் கிடைக்கிறது ..... அதுவும் சராசரியாகப் பதினைந்தே நாட்களில் ...... ITR 1 எளிது .... அதை நாமே தாக்கல் செய்யலாம் ..... மற்றவைகளை ஆடிட்டர் மூலம் தாக்கல் செய்தால் அவருக்கு அழ வேண்டியிருக்கிறதே என்பதால் நாமே தாக்கல் செய்து அதில் குழப்படி செய்தால் பிரச்னை வரத்தான் செய்யும் .....


சமீபத்திய செய்தி