மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணி
2 minutes ago
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
2 minutes ago
புதுடில்லி:மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோர் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பொதுக்குழுவில், தீர்மானம் நிறைவேறியது.இதுகுறித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலை பொதுக்குழுக் கூட்டம், நேற்று முன் தினம் நடந்தது. மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடுவோர் வயது வரம்பை, இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. கடந்த 2019- - 2020ம் ஆண்டுக்குப் பின், கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பல்கலை மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, லிங்டோ கமிட்டி பரிந்துரைப்படி, வயது வரம்பைத் தாண்டிய மாணவர்கள், மாணவர் சங்கத் தேர்தல்களில் பங்கேற்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இனி, இளங்கலை மாணவர்கள், 17 முதல் 22 வயது வரையிலும், முதுகலை மாணவர்கள் 25 வயது வரையிலும், பி.எச்டி., மாணவர்கள் 30 வயது வரையிலும், பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடலாம்.
2 minutes ago
2 minutes ago