உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்க சம்பளத்தையும் உயர்த்துங்க... : டில்லி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

எங்க சம்பளத்தையும் உயர்த்துங்க... : டில்லி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

புதுடில்லி: பார்லிமென்ட் லோக்சபா எம்.பி.க்கள் போன்று தங்களுக்கு சம்பளம் உயரத்தி தர வேண்டும் என டில்லி சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று குழு ஒன்றை டில்லி பா.ஜ., அரசு நியமித்துள்ளது.பாராளுமன்ற எம்.பி.க்கள் பல்வேறு சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளுடன் தொகுதி அலவன்சாக மாதத்திற்கு ரூ.70,000 மற்றும் அலுவலக அலவன்சாக மற்றொரு ரூ.60,000 பெறுகிறார்கள். இவர்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதன்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆகவும், டி.ஏ., அலவன்ஸ் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும், ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31,000 ஆகவும், கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டு இந்த உயர்வு கடந்த ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிட்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் நடைபெற்று வரும் டில்லி சட்டசபை கூட்டத்தொடரின் போது பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு போன்று தங்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து பா.ஜ.,வை சேர்ந்த அபெய் வர்மா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இரு வாரங்களில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவரியில் டில்லி சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் அலன்ஸ் திருத்தியமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டது. . அதன்படி எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் பிற சலுகைகள், ஏனைய படிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.54 ஆயிரத்திலிருந்து ரூ. 90 ஆயிரமாகவும், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் ரூ. 72 ஆயிரத்திலிருந்து ரூ. 1.7 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
மார் 26, 2025 22:51

MLA களின் சம்பளத்தை ஐம்பது லட்சமாகவும், எம்பிகளின் சம்பளத்தை ஒரு கோடியாகவும் உயர்த்துவது லஞ்சத்தை குறைக்கும். முப்பது லட்சம் பேரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு எம்பியின் சம்பளம் ஒரு லட்சம் என்பது ஒரு வெல்டரின் சம்பளத்தை விட குறைவானது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஊழலை ஊக்குவிக்கும். அதனால் கணிசமாக சம்பளத்தை கூட்ட வேண்டும். இந்தியா பணக்காரநாடாக மாறிவருகிறது. அதற்கேற்ற சம்பளம் கொடுக்க வேண்டும்.


Ramesh Sargam
மார் 26, 2025 21:41

என்னை கேட்டால் இந்த அமைச்சர்கள், MP -க்கள், MLA -க்கள் இவர்களுக்கு எதற்கு சம்பளம் கொடுக்கவேண்டும்? அவர்கள் வாங்கும் கிம்பளமே அவர்களுக்கு போதுமானது.


Matt P
மார் 26, 2025 21:12

chattamantra உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஒரு தொழிலாக அதுவும் தமிழ்நாட்டில் மக்களிடம் லஞ்சம் கொடுத்து அந்த பதவி பெறப்படுகிறது. இந்த மாதிரி சம்பளத்துக்கும் கிம்பளத்துக்கும் ஆசைப்பட்டு. அவங்க சட்டமன்றத்தில வாயை தொறக்கிறாங்களோ இல்லையோ ...அது வேற விஷயம். பெறுவதற்கு முன் அவர்கள் நம்ம காலில் விழுந்து கூட வணங்குவார்கள் . வந்த பின் அவங்களை பாக்க நாயா அலைஞ்சு அவங்க காலில் நாம் விழணும். நல்லவன் என்று தங்களை கருதி பணியை செய்பவர்கள் மன்னிக்கவும். நாட்டு நிலைமையை சொன்னேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை