உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் 4026 பேருக்கு கொரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 5 பேர் பலி

நாடு முழுவதும் 4026 பேருக்கு கொரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4026 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் புதிய தொற்றாளர்கள் அதிகம் பேர் கண்டறியப்பட்டு வருகின்றனர். கேரளாவில் 80 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு நிமோனியா, நீரிழவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களும் இருந்துள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 70 வயது முதியவர். மற்றொருவருக்கு 73 வயதாகிறது. இவர்கள் இருவரும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்.தமிழகத்தில் 69 வயது பெண்மணி ஒருவர் பலியாகி இருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்றுக்கு முன்பாகவே பார்க்கின்சஸ், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மேற்கு வங்கத்தில் 43 வயது பெண்மணி கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார். இவரும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்.கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயருவதைக் கண்டு அச்சம் வேண்டாம் என்றும், பொது இடங்கள் அல்லது அதிக மக்கள் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்றும் அந்தந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karunanithi N V
ஜூன் 03, 2025 21:03

What happened our health department?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 03, 2025 13:08

கொரோனா தொற்று காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என்று எப்படிச்சொல்ல முடியும் ? பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவா ?


Ramesh Sargam
ஜூன் 03, 2025 12:40

மக்களே உஷாராக இருங்கள். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய அரசு மீண்டும் கொரோனா வாக்சின் ஏன் போடத்துவங்கவில்லை? ஸ்டாக் இல்லையா? இல்லை வாக்சின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதா?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 03, 2025 13:53

மருத்துவக் காரணங்கள் இருக்கலாம் .... ஒருவேளை வாக்சினால் நோயெதிர்ப்பு இயல்பாக உருவாகியிருக்கலாம் ....


KRISHNAN R
ஜூன் 03, 2025 12:12

இனிமே மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். .........ஆடு திரு டே....போகவில்லை.... என்று.... சொல்ல போய் விடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை