உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீரவ் மோடியை விசாரிக்க மாட்டோம் பிரிட்டன் அரசுக்கு இந்தியா உறுதிமொழி

நீரவ் மோடியை விசாரிக்க மாட்டோம் பிரிட்டன் அரசுக்கு இந்தியா உறுதிமொழி

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 6,500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியை ஒப்படைத்தால், 'அவரை காவலில் எடுக்க மாட்டோம்; மும்பை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்' என, பிரிட்டன் அரசுக்கு இந்தியா தரப்பில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக, 2018ல் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. இதில், 6,500 கோடி ரூபாயை நீரவ் மோடி வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளை பதிந்தது. நாட்டை விட்டு தப்பி ஓடிய அவர், 2019ல் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் உள்ளார். அவரை, நம் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம், 2022லேயே ஒப்புதல் வழங்கிவிட்டது. ஆனால், இந்தியாவில் சிறைச்சாலைகள் மோசமாக இருப்பதாகவும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் நடக்கும் என்றும், நீதிமன்றத்தில் நீரவ் மோடி முறையிட்டார். இதையடுத்து மத்திய அரசு சார்பில் உறுதிமொழி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 'நீரவ் மோடியை நாங்கள் மனிதாபிமான ரீதியில் நடத்துவோம். அவரை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைப்போம். 'அங்கு, கைதிகளுக்கான வசதிகள் சர்வதேச தரத்துக்கு இணையானவை. அவரை எந்த விசாரணை அமைப்பும் காவலில் எடுத்து விசாரிக்காது. அவர் மீது நீதிமன்றத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்படும்' என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
அக் 05, 2025 11:44

[அவரை காவலில் எடுக்க மாட்டோம் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்] முரணாக இருக்கிறது...


Sudha
அக் 05, 2025 10:30

அதாவது எங்க சிறைகள் விசாரணை முறைகள் அப்படித்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம்? அதுவும் அந்தமான் பாளையம்கோட்டை புகழ் பிரிட்டிஷ் அரசுக்கு? எப்படி இந்தியா முன்னேறும்? அதான் மரபணு க்களிலே அடிமைத் தனம் ஊறி இருக்கிறதே.


Yasar Arafat Yasar Arafat
அக் 05, 2025 10:04

நீரவ்மோடிக்கு இந்தியா ஆதரவு தருகிறதா.?


Premanathan S
அக் 05, 2025 09:53

நீரவ் பணக்காரர் பௌன்சர்களை சிறையில் தன் கூட வைத்துகொள்ள அனுமதி கிடைக்கும் நமது பக்கிரிக்கு காவல் மரணம் வராமல் இருக்க வகை செய்தால் சம நீதி என்று பெருமிதப்படலாம்


duruvasar
அக் 05, 2025 08:47

அடுத்த உத்திரவு இவரை கொசு கடிக்காம இருப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஒரு பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் .வழக்கு 2026 ஜூன் மாதம் இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


R.RAMACHANDRAN
அக் 05, 2025 07:17

இந்த நாட்டில் குற்றவாளிகளை காப்பாற்றுவதும் நேர்மையானவர்களை ஒதுக்குவதும் தான் அரசின் அங்கங்களின் கடமையாக உள்ளது.ஆயிரக் கணக்கான கோடிகள் கடன் கொடுத்துவிட்டு அதில் ஆதாயம் அடைந்ததால் கடனை வசூலிக்காமல் பாதுகாப்ப்பாக தப்பிச் செல்லவிட்டு பாசாங்கு செய்து கொண்டுள்ளனர் கடமைகளை செய்வது போல.


Mani . V
அக் 05, 2025 06:56

காவலில் எடுத்து விசாரிக்கவில்லையென்றால் அப்புறம் எதற்கு செலவு செய்து இந்தியா அழைத்து வர வேண்டும்?


முக்கிய வீடியோ