வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேத்திக்கி பெண்ட்டகன் இந்தியாவுக்கு.புகழாரம். ராஜ்நாத் அமெரிக்க விஜயம். கூட்டிக் கழிச்சிப் பாத்தா ராணுவ, தளவாட வியாபாரம்தான் மிஞ்சும்.
வாஷிங்டன் , : நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த, 442 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கின் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுஉள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின், 'சோனோபாய்ஸ்' எனப்படும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பதற்கு, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கின் ஒப்புதல் அளித்துள்ளார்.இதை, அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது, 442 கோடி ரூபாய் ஒப்பந்தமாகும்.ஏவுகணைகளுடன் அது தொடர்புடைய சாதனங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு
'நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில், சிறந்த நட்பு நாடான இந்தியாவுக்கு இந்த ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழுவையும் சந்தித்து ராஜ்நாத் சிங் பேசினார். மேலும், அமெரிக்காவின் ராணுவ தொழில்துறையினர் ஏற்பாடு செய்திருந்த வட்டமேஜை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியாவில் தொழில் துவங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து கொள்ளும்படி ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
சோனோபாய்ஸ் என்ற சாதனம், நீருக்கடியில் நகர்ந்து செல்லும் பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறது. குறிப்பாக, நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. நீர்மூழ்கி கப்பல் இயங்குவதால் ஏற்படும் ஒலியை வைத்து அல்லது சோனோபாய்ஸ் அனுப்பும் கதிர்கள் எதிரொலித்து வருவதில் இருந்து நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்கும்.வானத்தில் இருந்து அல்லது போர்க்கப்பல்களில் இருந்து இதை செலுத்த முடியும். அது நீரில் மிதந்து சென்று, தன் இலக்கை கண்டுபிடித்துச் சென்று தாக்கக் கூடியது. கடலில் மிதக்கும்போது, மேலே உள்ள ரேடியோ அலைவரிசைகளையும், நீருக்கு அடியில் சென்சார்களையும் பயன்படுத்தும். சாதாரணமாக இது, 13 செ.மீ., விட்டமும், 91 செ.மீ., நீளமும் உடையதாக இருக்கும்.
நேத்திக்கி பெண்ட்டகன் இந்தியாவுக்கு.புகழாரம். ராஜ்நாத் அமெரிக்க விஜயம். கூட்டிக் கழிச்சிப் பாத்தா ராணுவ, தளவாட வியாபாரம்தான் மிஞ்சும்.