உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா!

ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாடு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவரது விசா நீட்டிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் போராட்டம் காரணமாக வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா , நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.மர்மமான முறையில் ஏராளமானோர் காணாமல் போக காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்தது. மேலும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்து இருந்தது.இந்நிலையில், இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவின் விசாவை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kanns
ஜன 09, 2025 13:01

UnLawful Islamic Fanaticist Usurpers of Bdesh After Terrorist Forced Eviction of Elected Govt are Misusing Powers& Making Illegal Orders. Execute All Such PowerHungry Sadist Criminals if Region& World is to Remain Peaceful


Laddoo
ஜன 09, 2025 09:16

நம்பி வந்தவரை நட்டாற்றில் விடக் கூடாது. அது இந்திய மாண்பு.


Ramesh Sargam
ஜன 08, 2025 22:06

இனி வாழ்நாள் முழுவதும் இந்தியாவிலேயே கழிக்கவேண்டியதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை