உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதி வழங்கி இந்தியா தாராளம்!

மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதி வழங்கி இந்தியா தாராளம்!

புதுடில்லி: மாலத்தீவுக்கு ரூ.420 கோடி இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது. இதற்கு மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார்.தொடர்ச்சியான இந்திய விரோத செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், மீண்டும் உதவி கேட்டு இந்தியாவிடம் வந்துள்ளது மாலத்தீவு அரசு.இந்தியா கடந்தாண்டு வழங்கிய 50 மில்லியன் டாலர் (ரூ.420 கோடி) அவசர கால நிதியுதவியை, இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இந்தியா, ரூ.420 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது.இதற்கு, மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஹாலீல் கூறியதாவது:மாலத்தீவுக்கு நிதி உதவியை வழங்கியதற்காக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சரியான நேரத்தில் மாலத்தீவுக்கு இந்தியா உதவி உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 12, 2025 20:04

அதைவிட இந்த பணத்தை இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு என்று கொடுத்திருக்கலாம். 2026ல் கூடுதலாக ஓட்டுக்களை பெற்றுத்தரும்.


K.n. Dhasarathan
மே 12, 2025 18:00

பிரதமருக்கு ஆடுத்த நாடுகளுக்கு பணம் கொடுக்க தெரியுது, 420 கோடி, ஆனால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டிற்கு 200 கோடி மட்டும் கொடுத்தார் அதுவும் ஆறு மாதம் கலித்து, யார் வீடீடு பணம் ? பெரும் பணக்கார நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி, யார் வீட்டு பணம், அதற்க்கு தமிழ்நாட்டின் ஜாலராக்கள் ஆதரவு, அதுவும் நிதி அமைச்சர் உள்பட, என்ன கொடுமை சார் இது மக்கள் அன்றே தூக்கி எரிந்திருக்க வேண்டும், இப்போது அனுபவிக்கிறோம். ஒரு மினாரிட்டி அரசின் கொடுங்கோன்மையை .


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:22

சீனாவுக்கு வேலை பார்க்காதே என்று நிபந்தனை விதித்து கொடுத்திருக்கலாம் .... .


raghavan
மே 12, 2025 16:43

இதுவும் ஒரு நன்றி கெட்ட ..


Ayyasamy
மே 12, 2025 16:38

I dont understand. Here in india I see some people extremely suffering in railway station, some traffic signals , some begging with kids on road. I request india to first capture those people and join them in any cleaning job atleast they should be arranged to have some atleast very low profile job for regular food 3 times a day and basic accomodation. Spend tax money on first taking care of extremely suffering indian people then think to feed other country.


N Srinivasan
மே 12, 2025 17:57

I am sure you are aware. A rule has been brought in indore city where both begging and giving money yo beggars are offence. Has been initiated an year back and the city is now 90% beggar free. All the beggars have been taken for counseling and depending on their capability put on employment studies etc. But no freebies given tk them


Shankar
மே 12, 2025 16:03

ஒரே அடில கொல்வதற்கு நம்ம பாம்பு நல்ல வளரனும்.


visu
மே 12, 2025 14:59

இவங்களுக்கு எவ்வளவு செய்தாலும் மத அடிப்படையில்தான் முடிவுகள் எடுப்பார்கள் பேசாம அவங்களை சுதந்திரமா அப்படியே விட்டு விடுவது நல்லது


Partha
மே 12, 2025 14:10

எங்க வரி பணத்தை வேஸ்டு பண்ணாதீங்க ப்ளீஸ். பாம்பு க்கு பால் வார்காந்திங்க


Kothandaraman Ramanujam IITM
மே 12, 2025 13:42

பணம் கொடுப்பது பாம்புக்கு பால்வார்ப்பது போல்


Kanakala Subbudu
மே 12, 2025 12:06

மாலத்தீவு நமது எதிரி நாடு ஆகிக்கொண்டு இருக்கு. அப்புறம் எதுக்கு இந்த தாராளம். சில நேரங்களில் நமது அரசு எடுக்கும் முடிவுகள் நமக்கு புரிவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை